நடிகை மீனாவை இரண்டாவது திருமணம் செய்கிறாரா தனுஷ்.? முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு..

0

பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், சினிமா கிசு கிசுக்களை யூ டுயூப்பில் பேச தொடங்கிய பின்பு தான் பிரபலமானார். தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய அந்தரங்க விசயங்களை வெளியில் பேசி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றவர் பயில்வான் ரங்கநாதன், ஆனால் கடும் எதிர்ப்புகள் வந்தால் கூட அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவருடைய வேலையை செய்து வருகின்றவர்.

நடிகை மீனா கணவர் இறந்த போது, நடிகை மீனா கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசிய பயில்வான் ரங்கநாதன், குறிப்பாக கணவர் விருப்பத்துக்கு எதிராக மீனா நடந்து கொண்டதாகவும், அதனால் அவருடைய கணவர் மன உளைச்சலில் இருந்தது போன்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் பயில்வான். மேலும் மீனா கணவர் மருத்துவ சான்றிதழை வெளியிட வேண்டும், அவருக்கு ஏன் அவசரமாக நூரையீரல் மாற்று சிகிச்சை செய்யவில்லை என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தார் பயில்வான்.

இது சினிமா துறையினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இளம் வயதில் கணவனை இழந்து சோகத்தில் இருக்கும் மீனாவை மேலும் புண்படுத்தும் விதத்தில் பேசிய பயில்வான் மனிதன் தானா.? என்று சினிமா துறையினர் கடுமையாக பேசி இருந்தனர்.இந்நிலையில் தற்பொழுது மீனா குறித்து புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன், சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றில் பயில்வான் பேசுகையில்,

மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும் தனுஷ் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பயில்வான் ரங்கநாதன். மேலும் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கணவரை இழந்து மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வரும் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும்.

ரஜினியுடன் ஜோடிப் போட்டு நடித்தாலும் நடிகை மீனா அவருக்கு மகள் போலத்தான் இத்தனை வருடங்களாக பழகி வருகிறார். அதனால், கண்டிப்பாக தனுஷை மீனா திருமணம் செய்து கொண்டு தனது பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் மீனா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். இது போன்ற பயில்வான் பேச்சுக்களால் ரஜினிகாந்த் கடும் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதற்கு முன்பு, நடிகை கஸ்தூரி, மற்றும் நடிகை ராதிகா குறித்து பயில்வான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது, தன்னை பற்றி பயில்வான் பேசியதற்கு பதிலடி தரும் விதத்தில் நடிகை கஸ்தூரி பதில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் பயில்வானை பன்றி என்றும், நீ விளக்கு பிடித்தாயா என கடுமையாக பேசினார், ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாத பயில்வான் மீண்டும் கஸ்தூரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில தகவலை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து பயில்வான் பேசியதற்கு பதில் பேசினால், அல்லது ஏதவாது நடவடிக்கை எடுக்க முயன்றால் மேலும் நம்மை பயில்வான் அசிங்க படுத்திவிடுவார் என தயக்கத்தில் பயில்வான் என்ன பேசினாலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்வதில்லை. ஒருமுறை நடிகை ராதிகா தயார் பற்றி தவறாக பயில்வான் பேசிய அடுத்த சில நாட்களில் திருவான்மியூர் கடல்கரையில் பயில்வான் மற்றும் ராதிகா இருவரும் பொது இடத்தில் நேரடியாக சண்டையிட்டனர்.

இதே போன்று நடிகை ரேகா நாயர் குறித்து தவறாக பேசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். அவருடைய தனிப்பட்ட வாழ்கை குறித்தும் அவருடைய ஒழுக்கம் குறித்து சந்தேகம் எழுப்பும் வகையில் பயில்வான் பேசியிருந்த நிலையில்,வழக்கம் போல் காலை நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த பயில்வானிடம் நேரில் சென்று பொதுமக்கள் மத்தியில் சண்டையிட்டார் ரேகா நாயர்.

உன் வீட்டுப் பெண்களை இப்படி பேசுவியா.? என கேட்ட ரேகா நாயர். மேலும் என்னைப் பற்றி பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கின்றது. உன் வீட்டுப் பெண்களைப் பற்றி இப்படி பேசி இருக்கின்றாயா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், உன் மகள் என்ன செய்கிறது என்று உனக்குத் தெரியுமா.? காண்டம் அது இது என்று என்னை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றாய். சினிமாவில் நடிக்கும் நடிகரைப் பற்றி பேசி அதில் வரும் பணத்தில் நீ உயிர் வாழக்கூடாது.

நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் நான் உன் பிள்ளையா.? உன் பொண்டாட்டியா.? வயதுக்கு கூட மரியாதை தரமாட்டேன். என்னைப் பற்றி பேசுவது உனக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் அம்மணமாக நடிப்பேன், சினிமாவில் என்ன வேண்டுமென்றாலும் நான் செய்வேன். உனக்கு என்ன வந்தது, நீ என்ன விளக்கு பிடித்தாயா? இல்லை கூட்டிட்டு போனியா.? செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல். நான் அவுத்துப் போட்டு நிற்பேன் உனக்கு இஷ்டம் இருந்தால் பார்.

நீ தான் பக்கத்தில் உட்கார்ந்து விளக்குப்படுத்தியா.? காண்டம் பயன்படுத்துகிறேன், விபச்சாரி என்று இப்படியெல்லாமா பேசுகிராய், நீ என்னை கூட்டிட்டு போனியா, விபச்சாரி என்று சொல்வதற்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது. அம்மணமாக நடித்தால் என்ன வேண்டுமென்றாலும் நீ பேசுவியா.? கழட்டி போட்டு நிற்கிறேன் நீ பார்க்கிறாயா.? என ரேகா நாயர் கேட்க, அதற்கு சீ..சீ.. என்று கண்ணை முட்டிக்கொண்டு ஓடிவிட்டார் பயில்வான் ரங்கநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here