நன்றி கெட்ட பாலா… துரோகத்தால் தலையில் துண்டை போட்ட சூர்யா- ஜோதிகா… பாலா இப்படி செய்யலாமா.?

1
Follow on Google News

இயக்குனர் பாலா மனைவி முத்துமலரை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு, நடிகர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க தொடங்கினர். மனைவியை விவாகரத்து பெற்று பிரிவதற்கு முன்பே சுமார் 4 வருடங்களாக மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த பாலா, அவரால் முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு, பாலாவுக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க, அவருக்கு உதவும் வகையில், ஒரு படம் நடித்து கொடுக்க முன் வந்த சூர்யா அந்த படத்தை தானே தயாரிக்கவும் தயாரானார், இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா, தந்தை வேடத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஜோதிகா நடிப்பதாக இருந்தது, இதனை தொடர்ந்து படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடக்கியது.

படம் தொடங்குவதற்கு முன்பே பாலா குணம் அறிந்து ஏகப்பட்ட மாற்றங்களுடன் படப்பிடிப்பை தொடங்கினார் சூர்யா. முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்கியது முதல் படத்தின் கதை மற்றும் காட்சி என அனைத்திலும் சூர்யா மூக்கை நுழைத்து சிறு சிறு மாற்றம் செய்ய வலியுறுத்தி வந்தது பாலாவுக்கு பிடிக்கவில்லை, இதனை தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் சூர்யா – பாலா மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பாதியிலே வெளியேறினார் சூர்யா. இதனால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிற்கும் நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளரான சூர்யா -ஜோதிகா இருவருக்கும் மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சூர்யா – பாலா இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்து வந்தது, ஒரு கட்டத்தில் சூர்யா மன்னிப்பு கூட கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பாலா பிடிவாதமாக, படத்தின் படைப்பிடிப்பில் இருந்து பாதியில் ஓடிவிட்டான் சூர்யா, இனி நான் இந்த படத்தை எடுக்க போவது இல்லை என பாலா பிடிவாதம் பிடிப்பதால், படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சூர்யா – பாலா இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த படத்தில் நடிக்க இருந்த ஜோதிகா தனக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிக்கட்டும் என இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலாவுக்கு உதவி செய்யும் நோக்கில் முன் வந்த ஜோதிகா – சூர்யா இருவரையும் மிக பெரிய நஷ்டத்தை சந்திக்க வைத்து, தலையில் துண்டை போட வைத்துள்ளார் பாலா என்றும், மேலும் இது தனக்கு உதவ முன் வந்தவர்களுக்கு செய்யும் நன்றி கெட்ட செயல் என்றும், இது சூர்யா – ஜோதிகா இருவருக்கும் நடந்த உச்சகட்ட துரோகம் என இயக்குனர் பாலாவை கடுமையாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா அஜால் குஜால்… கள்ளகாதலர்கள் போல் கையும் களவுமாக மாட்டியது எப்படி.?

1 COMMENT

  1. பாலாவுக்கு இதெ வேலையா போச்சு .

Comments are closed.

error: Content is protected !!