பறிபோகிறது சூர்யாவின் தேசிய விருது… இந்திய அளவில் மிக பெரிய அவமானத்தை சந்திக்கும் சூர்யா..!

0
Follow on Google News

இந்திய அளவில் சிறந்த திரைப்படம், மற்றும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு ஜனாதிபதி அவர்கள் தேசிய விருது வழங்கி கௌரவப்படுத்துவர். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படம் சுமார் 5 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

சூழரைப்போற்று படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது. மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற நடிகைஅபர்ணா பாலமுருளி, இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்கான விருது என சூரரை போற்று படத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட போதே நடிகர் சூர்யாவுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தேசிய விருது தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்தது தான் இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம். சூர்யாவின் மேனேஜ் தங்கதுரை பல உள்ளடி வேலை செய்து சூர்யாவுக்கு தேசிய விருதை பெற்று தந்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்த நிலையில், இது குறித்து தமிழ் சினிமா துறையை சேர்ந்த பல தயாரிப்பாளர்கள், ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்திற்கு இது குறித்து புகார் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக தேசிய விருது தேர்வு குழுவில் இடம் பெறுகின்றவர்கள், தேசிய விருது பட்டியலில் இடம் பெறும் படத்திற்கும், மேலும் தேசிய விருது பட்டியலில் இடப்பெற்று இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்கின்ற உறுதிமொழி கடிதம் கொடுத்திருக்க வேண்டும்.

அப்படி இருக்கையில் ச தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சூழரைப்போற்றும் படம் மற்றும் அந்த படத்தில் நடித்த சூர்யா இடன்பெற்று இருக்கையில், சூர்யாவுக்கு நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தமில்லை என தேசிய விருது தேர்வு குழுவில் இடப்பெற்ற சூர்யாவின் மேனேஜர் எப்படி உறுதிமொழி கடிதம் கொடுத்திருப்பார் என்கின்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சூர்யாவுக்கு விருது கிடைக்க தேசிய விருது தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த தங்கதுரை மூளையாக செயல்பட்டதாக ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில். மேலும் பிலிம் பேர் கரஸ்பாண்டாக தங்கதுரை இருப்பதால் தான் தேசிய விருது தேர்வு குழுவில் இடன்பெற்றர் என்றும் தகவல் வெளியானது.

ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு தங்கதுரை பிலிம் பேர் கரஸ்பாண்டாக பணியில் இருந்து விலகி விட்டதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தங்கதுரை தேசிய விருது தேர்வு குழுவில் இடம் பெற்றது குறித்து மேலும் சந்தேகம் வலுத்துள்ளது. இந்த நிலையில் விரைவில் சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது குறித்து சம்பந்தப்பட்ட துறை விசாரணையை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

விசாரணை தொடங்கும் பட்சத்தில், இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் விவாதமாக மாறி நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய அவமானத்தை பெற்று தரும். மேலும் விசாரணையில் சூர்யாவுக்கு வழங்கப்பட்ட தேசிய விருது பின்னணியில் தங்கதுரை இருந்ததும் உறுதிப்படுத்தபடும் பட்சத்தில், சூர்யாவுக்கும் வழங்கப்பட்ட தேசிய விருது பறிபோகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரஜினியால் கடனாளியான தனுஷ்… கடனை அடைக்க என்ன செய்தார்  தனுஷ் தெரியுமா.?