பொன்னியின் செல்வனை சவால் விட்டு காலி செய்ய களத்தில் இறங்கும் தனுஷ்… கடும் பீதியில் மணிரத்தினம்..

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் அதிக பொருட்செளவில் எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படம் பார்ட் 1, பார்ட் 2 என இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் வரலாற்று சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது பேன் இந்தியா படம் என்பதால் இந்தியா முழுவதும் இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் படம் பாகுபலி மிஞ்சும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பொன்னியின் செல்வன் படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இந்த படத்தின் டீசரை பார்த்த சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேபோன்று படத்தில் இடம்பெற்ற பொன்னி நதியின் பாடல் மக்கள் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டது.

இந்த நிலையில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தை லாப நோக்கில் வெற்றி அடைய வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனரும். அந்த வகையில் அந்த வகையில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் புரொமோஷன் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் சுமார் செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

முதல் சுமார் ஒரு மாத காலம் புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ள மணிரத்தினம், இந்த படத்தில் நடித்துள்ள நடிகைகளை அனைவரும் செப்டெம்பர் மாதம் முழுவதும் வேறு எந்த ஒரு கமிட்மெண்டும் இல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி நடிகர், நடிகைகள் ஓகே சொல்லியுள்ளார்கள்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் செப்டம்பர் 30ஆம் தேதி, அதே தினத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் நானே வருவேன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இதனால் தனுஷின் அடுத்த படமான நானே வருவேன் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் அதே தினத்தில் நானே வருவேன் படம் வெளியானால், பொன்னியின் செல்வன் வசூல் பெருமளவில் பாதிக்கும் என இயக்குனர் மணிரத்தினம் கடும் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் வெளியாகும் செப்டம்பர் 30ம் தேதி நானே வருவேன் படத்தை வெளியிட வெளியிடாமல், வேறு ஒரு தேதிக்கு மாற்றுவதற்கு பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இருந்தும் நானே வருவேன் படத்தை அதே தினத்தில் வெளியிடுவதில் அப்படத்தின் தயாரிப்பாளர் தானு மற்றும் தனுஷ் உறுதியாக இருகிறார்கள், இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாகுபாலி போன்று பிரம்மாண்டமாக படம் அமைந்திருந்தால், எதற்காக நானே வருவேன் படத்திற்கு பயந்து நடுங்க வேண்டும் என்கின்ற விமர்சனமும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது குறிப்பித்தக்கது.

மணிரத்தினத்திற்கே நம்பிக்கை இல்லை… பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர் பரிதாபம் என்ன தெரியுமா.?