சிவகார்திகேயனின் அந்தரங்க விளையாட்டு …. இமான் கையில் இருக்கும் ஆதாரங்கள்…

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் எனக்கு மிக பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என இமான் நாசூக்கா பேட்டி ஒன்றில் பேசிய பின்பு, இமான் குடும்பத்தில் புகுந்து சிவகார்த்திகேயன் சடுகுடு விளையாடியவிட்டார் என பலரும் சிவகார்த்திகேயனை கழுவி கழுவி ஊத்திக் கொண்டிருந்த நிலையில்,இமானின் முதல் மனைவி மௌனிகா சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என புகழ் பாடியது மட்டுமல்லாமல் இமான் மீது தான் தவறு என பேட்டி கொடுத்தார்.

இமான் முதல் மனைவியின் இந்த பேட்டி சிவகார்த்திகேயன் இமான் குடும்பத்தில் சடுகுடு விளையாடியதாக உலா வரும் தகவல் உண்மை தான், அதனால் தான், சிவகார்த்திகேயனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்து விட்டார் இமானின் முதல் மனைவி மௌனிகா என இந்த விவகாரம் மேலும் அனல் பறந்து, மேலும் இமானின் முன்னாள் மனைவி மௌனிகா இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயனைப் புகழ்ந்தும் இமானை வசைபாடியும் பேட்டி கொடுத்தது பின்னணியில் கூட சிவகார்த்திகேயன் தான் உள்ளார் என பலரும் தெரிவித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் யோகி பாபுவின் மகளின் பிறந்த நாளுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் கலந்து கொண்டது, ஆனால் யோகி பாபுவின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விசாரித்ததில் தற்பொழுது சிவகார்த்திகேயன் இமான் விவகாரம் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ள நிலையில், யோகி பாபு மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டால் அங்கு இருக்கும் மீடியாக்கள் சிவகார்த்திகேயனை சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு மேலும் சிவகார்த்திகேயனுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுவார்கள்.

அதனால் தான் பயந்து கொண்டு சிவகார்த்திகேயன் யோகி பாபு மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றால் துணிந்து மீடியாவை எதிர்கொண்டு இருக்கலாம், அதனால் சிவகார்த்திகேயன் இமான் குடும்பத்தில் கை வரிசையை காட்டியுள்ளார் அதனால் தான் மீடியாவை சந்திக்க மறுக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இமான் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் தனக்கு ஆதரவாக பல சேனல்களில் பணம் கொடுத்து பேச வைப்பதின் மூலம், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசுகின்றவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இமானுக்கு ஆதரவானவர்கள் பல ஆதாரங்களை வெளியிடுவது சிவகார்த்திகேயனுக்கு மேலும் பல சிக்கல்களை உருவாக்கி வருகிறது.

அந்த வகையில் இந்த விவாதத்தை அமைதியாக சிவகார்த்திகேயன் கடந்து சென்றாலே ஓரளவு அவர் இதிலிருந்து தப்பித்து விடலாம், தொடர்ந்து சிவகார்த்திகேயன் பணம் கொடுத்து இமான் மீது தான் தவறு சிவகார்த்திகேயன் நல்லவர், இமான் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்க தான் சென்றார் சிவகார்த்திகேயன், என்கின்ற தகவல்களை பல நியூஸ் சேனல்கள் மூலம் தொடர்ந்து பரப்பி வருவதால் அது சிவகார்த்திகேயனுக்கே மிகப்பெரிய சிக்கல் ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் சினிமா துறையினர்.

சிவகார்த்திகேயன் செய்த சேட்டைகளின் பல ஆதாரங்கள் இமான் கைவசம் உள்ளது என்றும், இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் இமானிடம் தொலைபேசியில் மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தவறு செய்து விட்டேன் என்று பேசிய ஆடியோ ஆதாரமும் இமானிடம் உள்ளது, மேலும் சிவகார்த்திகேயனும் இமானின் முதல் மனைவியும் பேசிய சில அந்தரங்க பேச்சுகளும் ஆடியோவாக உள்ளது என முக்கிய சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் தொடர்ந்து சிவக்கார்த்திகேயன் இமான் மீது தான் தவறு என திரை மறைவில் பணம் கொடுத்து தில்லாலங்கடி வேலைகளை செய்து வந்தால், சிவகார்த்திகேயன் குறித்த பல ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளியே வரும் என எச்சரிக்கின்றனர் சினிமா துறையைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர் ஒருவர்.