விஷ்ணு பாத்ரூம் உள்ளே நுழைந்த பூர்ணிமா… அட கடவுளே… என்னடா நடக்குது பிக் பாஸ்ல…

0
Follow on Google News

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பல பலமான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. குறிப்பாக, இந்த சீசனில் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இருப்பதால், போட்டியாளர்களிடையே வாக்குவாதம், பாஞ்சாயத்து, சண்டை என நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.

இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த ஏழாம் சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்பதால், நிறைய ஏழரையான சம்பவங்கள் டபுள் டபுளாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் மக்களும் தினசரி தவறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

இப்படி பெரும்பாலான மக்கள் விரும்பிப் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் விஜய் டிவியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை ஓடிடியில் 24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனாலேயே டிவியில் மிஸ் பண்ணும் காரசாரமான விஷயங்களையும் ஓடிடியில் பார்த்து மகிழலலாம்.

இவ்வாறு ஓடிடியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள், போட்டியாளர்கள் பண்ணும் அட்டூழியங்கள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் போன்றவற்றை கட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகி ரசிகர்களை என்ட்டர்டெயின் செய்து கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், விஷ்ணு தான் பாத்ரூமில் தாழ்ப்பாள் போடாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி மாயாவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு பூர்ணிமா, ‘உங்களை யாரும் பாத்ரூமில் தாழ்ப்பாள் போடாம குளிக்க சொன்னது’ என்று விஷ்ணுவிடம் கேட்கிறார். பதிலுக்கு விஷ்ணு, தனக்கு அநியாயம் நடந்துவிட்டதாக கூறி புலம்புகிறார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும், பிக்பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் வேற நடக்குதா என கமென்ட் செய்து வருகின்றனர்.