சிவகார்த்திகேயன் என்னையும் வற்புறுத்தினார்… நடிகை பிரியங்கா மோகன் சொன்ன ரகசியம்..

0
Follow on Google News

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் அடுத்தடுத்து டாக்டர், டான், என்ற இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே இமான் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது நடிகை பிரியங்கா மோகனும் சிவகார்த்திகேயன் குறித்த ரகசியத்தைப் பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்துள்ளார். தொலைகாட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, பின்னர் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயனின் காமெடி கவுண்டர்களைப் பார்த்து சிரிக்காத பிரபலங்கள் இல்லை. அந்தளவிற்கு நகைச்சுவை உணர்வுமிக்க சிவகார்த்திகேயனிடம் மிமிக்ரி, டான்ஸ் என பல்வேறு திறமைகளும் இருந்தது. இவரது திறமையைப் பார்த்த இயக்குனர் பாண்டிராஜ், மெரினா திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்தார்.

குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ போன்ற படங்கள் மூலம் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்தார். இப்படி தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ள சிவகார்த்திகேயன், இப்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில், இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டி, சிவகார்த்திகேயனின் இமேஜை நாசம் செய்து கொண்டிருக்கிறது.

இருப்பினும், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இசையமைப்பாளர் இமானை திட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படி இமான்-சிவகார்த்திகேயன் சர்ச்சை இணையத்தில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனோடு தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பற்றி பலருக்கும் தெரியாத உண்மையை போட்டுடைத்துள்ளார்.

அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் குறித்து ரகசியமான தகவல் ஏதாவது தெரியுமா? என பிரியங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,’ சிவகார்த்திகேயன் பற்றி அனைவருக்கும் தெரியும். அவரைப் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம் என்றால், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சஸ்வீட் என்றால், மிகவும் பிடிக்கும், இனிப்புக்கு அடிமையாகி விட்டார். எங்களையும் சாப்பிட சொல்லி கொடுப்பார்.

என்னையும் கூட சாப்பிட சொல்லி வற்புறுத்தியுள்ளார், என்ன காரணம் என்று தெரியவில்லை. பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் ‘ என்று கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் பற்றி இவ்ளோ பெரிய ரகசியத்தை தெரிந்து வைத்த ஒரே நடிகை பிரியங்காவாகத்தான் இருக்க முடியும்…