இந்த தப்ப மட்டும் செய்ய வேண்டாம்… தாம்பத்தியம் பாதிக்கும்… வைரமுத்து அட்வைஸ்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை பாடி பெரிதும் மதிக்க தக்க பாடலாசிரியராக வலம் வந்த கவிஞர் வைரமுத்து, கடந்த காலங்களில் மிக பெரிய உச்சத்தில் வர இருந்த போது, சினிமா மேடைகளில் தவிர்க்க முடியாத ஒரு நபராக அணைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பேசி வந்தார். மேலும் சினிமா துறையிலும், பொது மக்கள் மத்தியிலும் மதிக்க தக்க நபராக வலம் வந்தவர் வைரமுத்து.

இப்படி போற்றுதலுக்குரிய நபராக இருந்த வைரமுத்து மீ டூ விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினார், பிரபல பின்னணி பாடகி சின்மயி தனக்கு வைரமுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என பகிரங்கமாக குற்றசாட்டுகளை முன்வைத்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து ஒவ்வொரு பெண்களாக நானும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டேன் என குற்றசாட்டுகளை அடுக்கினார்கள்.

இதனை தொடர்ந்து கோபுரத்தில் இருந்தவர் ஒரே நாளில் குப்புற விழுந்த கதையாக, வைரமுத்துவின் இமேஜ் பெருமளவில் டேமேஜ் செய்யப்பட்டது, மேலும் இந்த விவகாரம் பின்பு, சினிமா நிகழ்வுகளில் மிக குறைந்த அளவில் கலந்து கொண்டு வரும் வைரமுத்து, சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பு குறைந்தது, இந்நிலையில் தற்பொழுது சமீபத்தில் வைரமுத்து அளித்த பேட்டி ஒன்றில், தாம்பத்தியம் பற்றி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

அதில் வைரமுத்து பேசுகையில் நான் தனியாக இருந்திருக்கிறேன். 7 நட்சத்திர ஹோட்டல்களில் நான் தங்கும் போது, அங்கு நிறைய பழங்கள், குளிர்பானங்கள் மது பாட்டில்கள் உள்ளிட்ட பலவை இருக்கும். அந்த குளிர்பான பெட்டியை திறந்து பார்க்கும் போதுவிலையுயர்ந்த மதுபானங்கள் இருக்கும். அதை பார்த்து அதன் நிறங்களில் வேறுபாடுகளை என்று ரசிப்பேன். அவ்வளவுதான் எனக்கும் மதுவுக்கும் இடையே உள்ள ஈடுபாடு என பேசிய வைரமுத்து.

போதை பழக்கத்தால் தரி கெட்டுப்போன பல குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அதனால் அவர்கள் அனுபவித்த அவமானங்களை பார்த்திருக்கிறேன். போதை பழக்கத்தால் சிதைந்து போன குடும்பங்களை என் கண் முன்னே பார்த்த அனுபவம் எனக்கு இருக்கிறது. நீங்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியேறாக விட்டால் உங்கள் இல்லற வாழ்க்கைக்கு கூட பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

உங்களை நம்பி வரும் பெண்ணை நீங்கள் முழுமை செய்யாதவனாக இருப்பீர்கள் என்றால், அவளுக்கு நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தமாகும். ஒரு பெண்ணை நிறைவு செய்வதும், முழுமை செய்வதும் அவளை மதிக்கின்ற பணிகளில் ஒன்றாகும். நீங்கள் அவளுக்கு தங்கம், புடவை, உணவு, தங்குவதற்கு இடம் இவற்றை மட்டும் கொடுத்தால் போதாது. அவள் எதை எதிர்பார்த்து உங்களை திருமணம் செய்து கொண்டால் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதை நீங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றால், போதை பழக்கத்தை விட்டு தயவு செய்து வெளியேறுங்கள். நிகழ்கால தாம்பத்தியத்தை அது பாதிக்காவிட்டாலும், எதிர்கால தாம்பத்தியத்தை அது கண்டிப்பாக பாதிக்கும் என அறிவுறுத்திய வைரமுத்து மேலும், தாம்பத்தியம் குறைபட்டு போனால் வாழ்வில் ஒரு குறை வரும் குறை. இந்தக் குறை உங்களை எந்தெந்த துன்பங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது உங்களுக்கே தெரியாது .

சில ஆண்கள் மற்றும் பெண்களின் வாக்குமூலங்களை கேட்டு, சில துயரங்களை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த துயரங்களுக்கு புதிய தலைமுறை ஆட்பட்டு விடக்கூடாது என வைரமுத்து பேசியுள்ளார். இந்நிலையில் வைரமுத்துவின் இரட்டை அர்த்தம் பாடல்களை எடுத்து அப்பொது புரியவில்லை இப்போது புரிகிறது என பலரும் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வரும் நிலையில் தற்பொழுது தாம்பத்தியம் பற்றி பேசியுள்ளது போதை பழக்கத்தில் அடிமையாகி உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளது.