யாருகிட்ட உன் வேலையை காட்டுற… சிவகார்த்திகேயனுக்கு உதயநிதி வைத்து செக்…

0
Follow on Google News

பெரும் கடனில் தத்தளித்து வரும் சிவகார்திகேயன் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் டிமிக்கி கொடுத்த வந்த நிலையில், இதற்கு சிவகார்த்திகேயன் கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அந்த கூட்டமைப்பில் இதற்கு முன்பு சிவகார்திகேயன் வாங்கிய கடனை தவணை முறையில் ஒவ்வொரு படம் வெளியாகும் போது அடைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது,

ஆனால் ஒவ்வொரு படம் வெளியாகும் போது தவணை முறையில் கடனை அடைக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த சிவகார்த்திகேயனை, இம்முறை இறுக்கி பிடிக்க முடிவு செய்தது கூட்டமைப்பு. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் வரும் வசூலில் சுமார் 33 கோடி ரூபாய் கடன் காரர்களுக்கு செட்டில் செய்யவேண்டும், மீத பணத்தை அடுத்தடுத்த படங்களில் செட்டில் செய்ய வேண்டும் என கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் மாவீரன் படம் வெளியான பின்பு வசூல் ஆகும் பணத்தில் 25 கோடி ரூபாயும், ஆனால் படம் வெளியாவதற்கு முன்பு 8 கோடி ரூபாயும் தரவேண்டும் என சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. மாவீரன் படத்தில் தனக்கு கிடைக்கும் மொத்த பணத்தையும் கடன் காரர்களுக்கு கொடுத்து விட்டால், நாம் என்ன செய்வது என பெரும் குழப்பத்தில் இருந்து வந்தார் சிவகார்திகேயன்.

அந்த வகையில் யாரிடம் சென்றால், கடன்காரர்கள் நெருக்கடி கொடுக்க மாட்டார்கள் என்று நன்கு அறிந்தே சிவகார்த்திகேயன், கடங்காரர்களுக்கு கல்தா கொடுப்பதற்காகவே ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸிடம் அவரே சென்று மாவீரன் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு ரிலீஸ் உரிமையை கொடுத்து, நீங்க தான் இந்த படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என, கடன் காரர்களுக்கு கல்தா கொடுக்க பக்க பிளான் போட்டு தந்திரமாக காய் நகர்த்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.

அதாவது மாவீரன் படத்தை வேறு யாரு வெளியிட்டாலும், கடன்காரர்கள் நெருக்கடி கொடுப்பார்கள், ஆனால் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் இந்த படத்தை வெளியிட்டால், அவர்களிடம் கடன் காரர்கள் நெருங்க கூட மாட்டார்கள், மேலும் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்ம் நமக்கு சேர வேண்டிய பணத்தை சரியாக கொடுத்து விடுவார்கள் என கடன்காரர்கள் தண்ணி கட்டுவதற்காக ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸிடம் மாவீரன் படத்தை கொடுத்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால் சிவகார்த்திகேயனுக்கு கடன் கொடுத்தவர்கள் ஏற்படுத்திய கூட்டமைப்பு, நேரடியாக இந்த விஷயத்தை உதயநிதி கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளார்கள், தொடர்ந்து சிவகார்த்திகேயன் வாங்கிய கடனை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார், சரி தவணை முறையில் வாங்கிய கடனை கொடு என்று ஒரு சலுகை அளித்தால் அதுக்கும் சரி பட்டு வரமாட்டேன் என்கிறார், இப்ப எங்களை ஏமாற்ற உங்க ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் பின்னால் ஒழிந்து கொண்டுள்ளார் என கடன் கொடுத்த கூட்டமைப்பு உதயநிதியின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து யார் பக்கம் நியாயம் என்பதை அறிந்து, மாவீரன் படத்தின் வரும் வசூலில் , கடன் கொடுத்தவர்களின் கூட்டமைப்புக்கு சேர வேண்டிய பணத்தை ரெட் ஜெயன்ட்ஸ் வசூல் செய்து தரும் என்று உதயநிதி தெரிவிக்க, அதன் படியே மாவீரன் படத்தின் வரும் வசூலில், சிவகார்த்திகேயனுக்கு கடன் கொடுத்தவர்களின் கூட்டமைப்புக்கு சேரவேண்டிய தொகை செல்கிறதாம்.

அந்த வகையில் சமீபத்தில் மாவீரன் படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே,மொத்த பணமும் கடன் கொடுத்தவர்களுக்கு சென்று விட்டதே என வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நியாயமாக நடந்துகொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின் என் சினிமா துறையினர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.