அஜித்தை வம்பிழுத்து தனக்கு தானே ஆப்பு வைத்த சிவகார்த்திகேயன்.. எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா.?

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக,பின்பு ஒரு தொகுப்பாளராக அறியப்பட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன்.அடுத்தடுத்து நகைச்சுவை கலந்த கமர்சியல் படங்களின் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார்.

இந்த நிலையில் காமெடியான சிவகார்த்திகேயனை பார்த்த தமிழக மக்களிடம் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வெளிக்காட்ட துடித்த ஆக்சன் பட கதைகளை தேர்வு செய்து படு தோல்வி அடைந்து மண்ணை கவ்வினார் சிவகார்த்திகேயன். கோடிகளில் சம்பளம் வாக்கிய சிவகார்த்திகேயன், பணத்தாசையால் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்து அவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து கடனாளியானார்.

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டியராஜன், ஹீரோவாக வாய்ப்பு கொடுத்த தனுஷ் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் ஆகியோரை தான் ஒரு உயரத்துக்கு வந்த பின்பு உதாசீனப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படி தன்னுடைய வளர்ச்சிக்கு ஏணியாக இருந்து ஏற்றிவிட்டவர்களின் நன்றியை மறந்தவர் தான் சிவகார்த்திகேயன்.

கோடிகளில் சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பணத்தாசை காரணமாக தயாரிப்பாளராக உருவெடுத்து சொந்த படம் எடுத்து கடனில் மூழ்கினார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் நல்ல ஹிட் கொடுத்து மிகப்பெரிய வசூலை கொடுத்து ஓரளவு அவரை கடனிலிருந்து காப்பாற்றியது.

இருந்தாலும் தற்போது வரை அவர் சுமார் இதுவரை 75 கோடி கடனில் சிவகார்த்திகேயன் தத்தளித்து வருகிறார்.சமீப காலமாக தன்னை தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை தனக்கு ஆதரவாக செயல்படும் தனியார் தொலைக்காட்சி உதவியுடன் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

பிரின்ஸ் படம் வெளியாகும் மும்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் பேசுகையில் எம்ஜிஆர், ரஜினி, விஜய் அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் என்று அஜித்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருந்தது. அஜித் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது சிவகார்த்திகேயன் மீது அஜித் ரசிகர்கள் வெறுப்படையும் வகையில் அமைந்தது.

இந்த நிலையில் பிரிண்ட்ஸ் படத்தின் தமிழ்நாடு தியேட்டர உரிமையை சுமார் 23 கோடி கொடுத்து வாங்கிய பிரபல சினிமா பைனான்ஸ் அன்புச்செழியனுக்கு சுமார் 13 கோடி வர நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தை இழிவுபடுத்தும் வகையில் அன்பு செழியன் நடந்து கொண்ட விதம் பிரின்ஸ் படத்துக்கு எதிராக அமைந்துவிட்டது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

அதே போன்று தன்னை ரஜினி, விஜய்க்கு சமமாக நினைத்து கொண்டு ஆணவத்தில் ஆடிய சிவகார்த்திகேயன் மீண்டும் தோல்வி படத்தை கொடுத்து மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார். பிரின்ஸ் பட தோல்வியால் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவரா இருக்கும் படத்தின் வரவேற்பும் குறைந்துள்ளதால். இனி சிவகார்த்திகேயனின் சம்பளமும் மிகப்பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேவையின்றி தன்னுடைய உயரம் தெரியாமல் அஜித்தை வம்புக்கு இழுத்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.