சிம்பு பட நடிகை கர்ப்பம்: ட்விட்டர் வலைதளத்தில் குவியும் வாழ்த்துக்கள்..!

0

தமிழில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’, தனுஷ்ஜோடியாக‘மயக்கம் என்ன’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாயா. இந்த இரண்டு படங்களும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தாலும், தமிழில் எந்தவொரு படத்திலும் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் தாவினார். அங்கும் ஒரு சில படங்களில் நடித்தவர் திடீரென அமெரிக்காவுக்கு படிக்க ஓடினார்.

சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு பறந்து சென்றது அனைவருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது. அங்கு படிப்பை முடித்த கையோடு கடந்த 2019-வருடம் ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட ரிச்சா கங்கோபாத்யாயா தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தனது கணவருடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு பல்வேறு ரசிகர்களும், சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை தன் கணவருடன் சிறப்பாக கொண்டாடினார். தன் காதல் கணவருடன் இரண்டாம் வருட திருமண நாளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இவர் கணவருடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.