பாலியல் வழக்கில் கைதாகிறார் நடிகர் சித்தார்த்.? மும்பை சிறையில் அடைக்க மகாராஷ்டிரா போலீசார் தீவிரம்..!

0

கடந்த வாரம் பிரதமர் மோடி பஞ்சாப் சென்ற போது போராட்ட காரர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்பு காரணமாக டெல்லி திரும்பினார், இச்சூழலில் we stand with Modi எனும் டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்டில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார்.

அதில் ”ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது, பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்”. என பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.இதற்கு பதில் தரும் விதத்தில் இறகுப்பந்தின் ஆங்கில வார்த்தையான ஷட்டல் கார்க் என்பதை குறிக்க சித்தார்த் ”Subtle Cock” என்று பெண்களை பாலியல் ரீதியாக ஆபாசமாக குறிப்பிட்டிருந்தார்.

இது பெண்களை ஆபாசமாக சித்தரிக்க்கும் மோசமான வார்த்தை என்பதால் சித்தார்த்க்கு எதிராக கண்டனங்களை பலர் பதிவிட்டனர். மேலும் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டி ஜி பி க்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில்,

“உங்களின் கருத்து பெண்களை மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் உள்ளது. ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் அணைத்து தரப்பில் இருந்து சித்தார்த்துக்கு கடும் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளும் கட்சியான சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, இது “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் யாரும் பயன்படுத்த தகுதியற்ற மொழியில் சித்தார்த் பேசியுள்ளார். கருத்து வேறுபாடு எவ்வளவு இருந்தாலும், சொற்களில் நாகரீகம் கடைபிடிக்க வேண்டும்” என்று கடுமையாக பேசியுள்ளர். இந்நிலையில் இந்திய வீராங்கனையை ஆபாசமாக பேசியது தொடர்பாக மகாராஷ்டிரா காவல்த்துறை பாலியல் வழக்கு பதிவு செய்து சித்தார்த்தை எந்த நேரமும் கைது செய்து மும்பை சிறையில் அடைக்கலாம் என மும்பையில் இருந்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here