பப்ளிசிட்டிகாக சத்யராஜ் மகள் செய்த மலிவான செயல்… இதெல்லாம் ஒரு பொழப்பா.?

0
Follow on Google News

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சத்யராஜ், பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி பரபரப்பாக வெளியானது, அதன் பின்பு நேரடியாக நடிகர் சத்யராஜிடம் செய்தியாளர்கள் நீங்கள் பிரதமர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறீர்களா என கேட்ட போது, அதற்கு பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நான் நடிக்கிறேன் என்ற செய்தி எனக்கும் கூட செய்திதான் என தெரிவித்த சத்யராஜ்.

மேலும் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. சமூக வலைதளங்களில் எதேச்சையாக செய்திகளை பரப்புகிறார்கள் என நடிகர் சத்யராஜ் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்நிலையில் சத்யராஜை யாருமே பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அப்ரோச் செய்யாத நிலையில், யார் இந்த செய்தியை பரப்பி விடுவது என பலரும் குழம்பி பொய், எந்த செய்தி எப்படி பரவியது என ஆராய தொடங்கினார்கள்.

சினிமா விளம்பரதாரர் நிகில் முருகன் தான் முதலில் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தில் சத்தியராஜ் நடிக்க இருப்பதாக அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இதன் பின்னணியில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் உள்ளதாகவும், மலிவான விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் தொடர்ந்து சத்யராஜ் மக்கள் திவ்யா ஈடுபட்டு வருவதாக பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் போட்டுடைத்துள்ளார்.

அதாவது நிகில் முருகனிடம், பிரதமர் மோடி வரலாற்று படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக அவருடைய மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்து, இந்த செய்தியை வெளியிடுங்கள் என்று சொன்னதால் தான், நிகில் முருகன் அந்த தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது, அது மட்டுமில்லாமல், சத்யராஜ் மகள் திவ்யா தன்னை பிரபல படுத்தி இது போன்ற பல மலிவான விளம்பரத்திற்காக பல தில்லாலங்கடி வேலை செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக அழைப்பு விடுத்ததாக ஒரு செய்தி பரவியது, சத்யராஜ் திராவிட கொள்கையில் மிக தீவிரமாக இருந்து வர கூடியவர், அப்படி இருக்கையில் அவருடைய மகள் திவ்யா சத்யராஜுக்கு எப்படி பாஜக அழைப்பு விடுக்கும், மேலும் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சீட் கொடுக்கும் அளவுக்கு சத்யராஜ் மகள் அவ்வளவு ஒர்த் இல்லையே என பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில்,

தன்னுடைய அரசியல் வருகை குறித்து ஒரு வீடியோ ஒன்றை சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் வெளியிட்டு இருந்தார், அதில், வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடனும் இணைவதில் விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதும் இல்லை. எந்த கட்சியுடன் இணைய போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன் என சத்யராஜ் மகள் திவ்யா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்ததில், சத்யராஜ் மகள் திவ்யாவை பாஜக தரப்பில் இருந்து யாரும் அப்ரோச் செய்ய வில்லை, மேலும் அவர் அந்த அளவுக்கு பிரபலமும் கிடையாது என தகவல் வந்தது. இந்நிலையில் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் தான் பாஜக தரப்பில் இருந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு பாஜக அழைப்பு விடுத்தது போன்ற ஒரு செய்தியை பரப்பி விட்டு.

அதன் பின்பு அந்த செய்திக்கு விளக்கம் கொடுப்பது போன்று ஒரு வீடியோ வெளியிட்டு, அதையும் ஒரு செய்தியாக்கி உள்ளார் என்றும், இப்படி தொடர்ந்து தன்னை பிரபல படுத்தி கொள்வதற்காக, மேலும் தன்னை இந்த சமூகத்தில் ஒரு முக்கியமான பிரமுகராக காட்டி கொள்வதற்காக இது போன்ற மலிவான விளம்பரத்தில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் செயல்படுவதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here