கடனில் தத்தளிக்கு தமன்னா… அடமானத்தில் சொத்துக்கள்… ஆன்லைன் ரம்மி தான் காரணமா.?

0
Follow on Google News

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமன்னா, இன்று வரை தமிழ் ரசிகர்களின் Favourite Heroine ஆகவே வலம் வருகிறார். என்னதான் இவர் மும்பையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், தரமான பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து தமிழ் சினிமா தான் இவரை மேலே தூக்கி விட்டது. இதனாலேயே என்னதான் ஹிந்தியில் தற்போது பிஸியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சில வெயிட்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து தமன்னா தமிழிலும் நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா தான், தென்னிந்தியாவின் இரண்டாவது பணக்கார நடிகையாக இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 120 கோடியாக இருக்கிறது. மேலும், முன்னர் 1 படத்திற்கு, 2 கோடிக்கும் கம்மியாக சம்பளம் வாங்கிய தமன்னா, தற்போது 5 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். இப்படி 120 கோடி ரூபாய் அதிபதியாக இருக்கும் தமன்னா, மும்பையில் 20 கோடி மதிப்புள்ள வீடு மற்றும், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், பல கோடி மதிப்புள்ள பிளாட்டும் வாங்கி இருக்கிறார்.

இது மட்டுமின்றி, MW 320i, Mercedes – Benz GLE, Mitsubishi Pajero போன்ற பிரம்மாண்டமான சொகுசு கார்களையும் வாங்கி கோடியில் புரண்டு கொண்டிருந்தார். ஆனால் தற்போது ஏற்பட்ட திடீர் பண நெருக்கடியால், மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை இந்தியன் வங்கியில் அடமானம் வைத்திருக்கிறார்.

பணக்காரர்கள் வசிக்கும் இடமான மும்பை அந்தேரி மேற்கு வீர தேசாய் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தான், வங்கியில் அடமானம் வைத்து, 7.84 கோடி ரூபாய் பணம் வாங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மும்பை ஜூகு பகுதியில் சுமார் 6065 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் ஒன்றை, ரூபாய் 18 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து இருக்கிறார்.

அதோடு 27 லட்சம் அந்த அலுவலகத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 5 வருடத்திற்கு இந்த வாடகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா கூறப்படுகிறது. இந்நிலையில், லாஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற வெப் தொடரில் நடித்த போது, தன்னுடன் இணைந்து நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிக்க துவங்கிய தமன்னா, வீட்டில் பெற்றோர்கள் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்ட பின்னரும் இன்று வரை டேட்டிங் மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த வருடத்திலோ அல்லது அடுத்த ஆண்டிலோ தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் திருமணம் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இவர் கடனில் மூழ்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே நடிகைகள் நடிப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை வேறு ஒரு தொழிலில் Invest செய்துதான் பல கோடிகளை சம்பாதிப்பார்கள். அப்படித்தான் தமன்னாவும், தன் அப்பாவுடன் இணைந்து, தனது வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார்.

மேலும் அவர்கள், வைரம் மற்றும் தங்க நகை கடைகளையும் வைத்துள்ளனர். இப்படி இருந்தும் நடிகை தமன்னா கடனாளி ஆனதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அவர் செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்றும், மேலும் ஒருவேளை, நடிகை தமன்னா யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஒரு படத்தை தயாரித்திருக்கலாம், அதனால் கூட லாஸ் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், சினிமா நிறுவனத்தில் ஏதாவது பைனான்ஸ் போட்டு பணத்தை இழந்து இருக்கலாம் என்றும், அல்லது ரம்மி, ஆன்லைன் கேம்ஸ் என ஏதாவது விளையாடி கூட பணத்தை இழந்து இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்கள் பல தகவல்களை கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here