இரண்டாவது திருமணத்திற்கு தயாரான விஜய் டிவி பிரியங்கா… மாப்பிளை யார் தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் டிவி என்றாலே அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது பிரியங்கா தான். ஏனெனில், தனது காமெடி கலந்த பேச்சு திறமையால் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்.. மேலும், விஜய் டிவியின் தொகுப்பாளர்களுள், மிகவும் பிரபலமாக இருக்கும் பிரியங்காவின் நிகழ்ச்சிகளை, பலரும் இவருக்காகவே கண்டு களிப்பார்கள். ஆனால் இப்படி பலரையும் சிரிக்க வைக்கும் பிரியங்காவின் வாழ்க்கையிலும் வெளியில் சொல்ல முடியாத பல சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்று தான் அவரின் திருமணம்.

பல நிகழ்ச்சிகளில் வெளியில் சிரித்த முகத்தோடு, அனைவரையும் சிரிக்க வைத்தாலும், அவர் தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். பிரியங்காவுக்கு 11 வயது இருக்கும்போதே அவரின் தந்தை உயிரிழந்து விட்டார். அதன் பிறகு அவரையும், அவரின் சகோதரரையும், தனி ஆளாக அவரின் அம்மா தான் போராடி வளர்த்திருக்கிறார்.

இதனாலேயே பிரியங்கா பல நிகழ்ச்சிகளில், நான் வேலை செய்வதே என் அம்மாவிற்காக தான் என்றும், என் அம்மாவை நான் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும், அதுதான் என் ஆசை என்றும் எமோஷனல் ஆகவும் பேசி இருப்பார். இது ஒருபுறம் இருக்க பிரியாங்கா ஒருவரை காதலித்திருக்கிறார். பிறகு வீட்டில் சம்மதம் வாங்கி, 2016 ஆம் ஆண்டு தனது நெடுங்கால காதலரான பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பிரியங்காவுக்கும், அவரின் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியே தான் வாழ்ந்து வந்த நிலையில், மேலும் கணவரை பிரியங்கா விவாகரத்து செய்ய இருக்கிறார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அதெல்லாம் வெறும் வதந்தி என பிரியங்கா தரப்பில் இருந்து மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2022ஆம் ஆண்டு பிரியங்கா அவருடைய கணவரை விவாகரத்து செய்து கொண்டார்.

கணவரை பிரிந்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சோகத்துடன் பேசிய பிரியங்கா. வாழ்க்கையில் நான் எடுத்த சில தப்பான முடிவுகளால் எங்கம்மாவை நான் கஷ்டப்படுத்திவிட்டேன். இனிமேல் என்னோட லைஃப்ல நான் எடுக்க போற எந்த முடிவும் என்னோட அம்மாவை பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அடுத்து என்னோட ஹெல்த் மேல கவனம் செலுத்த முயற்சி செய்து வருகிறேன்.

கோச் ஒருத்தரோட உதவியோட ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டு வரேன். அவரும் என்னை கண்டிப்பா ஃபிட்டாக்கி விடுவேன் என ப்ராமிஸ் பண்ணி இருக்கார். எனக்கும் வயசாகிகிட்டே இருக்கு. எனக்கும் ஒரு குழந்தை பெத்துக்கனும் என ஆசை. என்னை யாராவது அதிகமா லவ் பண்ணனும், தாங்கு தாங்குனு தாங்கணும், குழந்தை பெத்துக்கணும்னா நான் ஹெல்த்தியா இருக்கனும். அதுக்காக தான் இதெல்லாம் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

என்னோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு நினச்சு எங்க அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. 34 வயசில் இருந்து சிங்கிள் மதரா இருந்து எங்களை ரொம்ப சிரமப்பட்டு வளர்த்தாங்க. அவங்களுக்கு நான் இனியும் கஷ்டத்தை கொடுக்க கூடாது” எனப் பபேசியிருந்தார் பிரியங்கா. இந்நிலையில் சமீபத்தில், அர்ச்சனா தொகுத்து வழங்கும், அவளும் நானும் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்காவிடம் கண்கலங்கி, உன் வாழ்வில் வரும் ஒருவன், கண்டிப்பாக உன்னை முழுமையாக காதலித்து, உனக்கு நிறைய குழந்தை செல்வங்களை கொடுக்க வேண்டும் என்று அர்ச்சனா வாழ்த்தினார்.

இதனால், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததை ரசிகர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் பிரியங்கா, தனது அம்மாவிற்காக, இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் பிரியங்காவின் சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை தான் 2 வது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here