மாமனார் வீட்டு பக்கத்தில் வீடு கட்டியது குத்தமா.? தனுஷ்க்கு ஏற்படும் தொடர் பிரச்சனை…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் தன்னுடைய போயஸ் கார்டன் வீடு குறித்து பதிலடி கொடுத்து இருந்தார். மேலும் பல சர்ச்சைகளுக்கு மறைமுகமாக தனுஷ் பதிலளித்தது. தொடர்ந்து சமீபகாலமாக பின்னணி பாடகி சுசித்ரா தனுஷ் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு தான் பதிலளித்துள்ளார் தனுஷ் என்று கூறப்பட்டாலும் அது உண்மை இல்லை என்றும்.

அதன் பின்னணியில் வேறு ஒரு காரணம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அதாவது நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் தற்பொழுது மிக பிரம்மாண்டமாக தன்னுடைய மாமனார் ரஜினிகாந்த் வீட்டுக்கு இணையாக ஒரு வீடு கட்டி உள்ளார். இந்த வீடு ஆரம்பத்தில் கட்டப்பட்ட போது இது ரஜினிகாந்த் தன்னுடைய மருமகனுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் கட்டி கொடுக்கிறார். மாமனார் பணத்தில் தான் இவ்வளவு பெரிய ஆடம்பரமான வீடு கட்டுகிறார் தனுஷ் என்றெல்லாம் செய்திகள் வந்தது.

ஆனால் இதில் ரஜினியின் பணமோ அவருடைய மகள் ஐஸ்வர்யாவோட பணமோ துலியும் இல்லை, தனுஷ் தன்னுடைய சொந்த உழைப்பில் போயஸ் கார்டனில் இடம் வாங்கி அங்கே தன்னுடைய பணத்தில் மிகப் பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்டி அந்த வீட்டில் தற்போது தனுஷ் மட்டுமே குடியிருந்து வருகிறார். அவருடைய குழந்தைகள் அவ்வப்போது அந்த வீட்டிற்கு வந்து செல்கிறார்கள் என்றும் தனுஷின் பெற்றோர்கள் தி.நகரில் தனுஷின் அலுவலகம் இயங்கி இருந்த ஒரு வீட்டில் குடியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டன் புதியதாக கட்டியுள்ள பங்களா அருகிலேயே தன்னுடைய பெற்றோர்கள் தங்குவதற்காக ஒரு வீடு வாங்கி உள்ளார். ஆனால் அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்வதற்கு கால அவகாசத்தை கேட்டிருந்தனர். அதற்கு தனுசும் ஓகே என்று சொல்லிவிட்டார், ஆனால் அவர்கள் காலி செய்வதற்கு முன்பு அந்த வீட்டின் முன்புறத்தில் தனுஷ் தரப்பினர் சில பொருட்களை அங்கே வைத்துள்ளார்.

இதற்கு அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் நாங்கள் காலி செய்வதற்கு முன்பு எதற்காக இங்கே வீட்டில் முன்பு பொருட்களை வைக்கிறீர்கள் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் வழக்கறிஞர்களை அணுக, மேலும் தனுஷ் மீது கேஸ் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்பதற்காக, தனுஷ் ரவுடிகளை வைத்து மிரட்டினார் என்றெல்லாம், அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் கிளப்பி விட இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது.

தனுஷ் ரவுடிகளை வைத்து மிரட்டினார், மின்சாரத்தை கட் செய்தார், தண்ணியை கட் செய்தார் என்றெல்லாம், அதாவது ஒரு அப்பாவியை தனுஷ் மிரட்டுவது போன்ற செய்திகள் வெளியாகி தனுசுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும் இது முற்றிலும் தவறான செய்தி என்பது தெரிய வந்தாலும் கூட தனுஷ் ஆல் இந்திய அளவில் பல மொழிகளில் சினிமாவில் நடித்து வருவதால்,

அந்தந்த மாநிலங்களில் இருந்து தனுசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் என்ன இப்படி ஒரு பிரச்சனையா, உங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமா என கேட்க, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தனுஷ் விளக்கம் கொடுப்பதற்கு பெரும் பாடுபட்டுள்ளார். இறுதியில் குடியிருந்தவர்களிடம் தனுஷ் நேரடியாக பேசி நான் உங்களுக்கு என்ன இடைஞ்சல் பண்ணேன், ரவுடிகளை வைத்து மிரட்டினேனா என்று தனுஷ் தரப்பில் இருந்து பேசப்பட்டதும்.

அப்படியெல்லாம் இல்லை என வருத்தம் தெரிவித்து விட்டு பரவாயில்லை நாங்கள் சொன்ன தேதிக்கு முன்பாக காலி செய்து வருகிறோம் என்று அந்த வீட்டை தனுஷ் தரப்பில் சமரசம் செய்து காலி செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தான் போயஸ் கார்டனில் ஏண்டா வீடு கட்டினோம் என்கின்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் தனுஷ் என்றும். அதை மனதில் வைத்து தான் போயஸ் கார்டன் வீடு சர்ச்சை குறித்து தனுஷ் மேடையில் பேசியதாகவும், அதனால் சுசித்ராவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனுஷ் பேசவில்லை என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here