ஏமாற்றிவிட்டு கடைசில கழட்டி விட்டுட்டு போறாங்க… நடிகை திரிஷா வேதனை… யார் ஏமாற்றியது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் திரிஷா, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நல்ல மார்க்கெட் த்ரிஷாவுக்கு இருந்தது. தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த திரிஷா சில காலம் மார்க்கெட் இல்லாமல் வீட்டிலே முடங்கினார், பின்பு மீண்டும் குத்தவையாக சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுத்து, விஜய் சிபாரிசில் லியோ படத்தில் வாய்ப்பை பெற்று தற்பொழுது மீண்டும் பிசி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக திரிஷா- விஜய் குறித்து கிசு கிசு மிக பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திரிஷா சினிமா உச்சத்தில் இருந்த போதே கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தொழிலதிபர் வருண் மணியனை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அதற்கான திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது, இதில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்.

வருண்மணியனை திருமணம் செய்ய முடிவு எடுப்பதற்க்கு முன்பு வரை தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார் திரிஷா, இருவரும் ஒன்றாக பொது இடங்களுக்கு ஜோடியாக சென்றுவந்த நிகழ்வுகள் அரங்கேறியது, விரைவில் நடிகர் ராணாவை திரிஷா திருமணம் செய்வார் என பேசப்பட்டு வந்த நிலையில் இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன் பின் காதல் தோல்விக்கு பின் சிறிது காலம் தனியாக இருந்த திரிஷா.

இதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தொழிலதிபர் வருண்மணியனை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தார் திரிஷா.இருவருக்கும் திருமண நிச்சயம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்பு மீண்டும் நடிகை திரிஷா தெலுங்கு நடிகர் ராணா இருவரும் நெருக்கி பழக தொடங்கினார்கள், வெளிநாடு நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒன்றாக சென்று, ஜோடியாக சுற்றி வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில் மீண்டும் ராணா – திரிஷா இருவரும் காதலிப்பதாக கிசு கிசு செய்திகள் வெளியானது. ஆனால் மீண்டும் திரிஷா – ராணா இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்கள் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவிக்க நடிகை திரிஷா தனது சமூக வலைத்தளத்தில், ‘முன்னாள் காதலியை நெருங்கிய நண்பர்களாக வைத்திருப்பவர்கள் நார்சிஸ்ஸிஸ்டிக் சைக்கோபாத்ஸ்’ என திரிஷா பதிவிட்டு தனது கோவத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் திரிஷா – ராணா இருவருக்கும் காதல் பிரேக் ஆப் ஆன காலகட்டத்தில் ராணாவிடம் த்ரிஷா பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்ட போது, அதற்கு பதிலளித்த ராணா, ‘’பத்து வருடத்துக்கும் மேலாக அவர் எனக்கு நல்ல தோழியாக இருந்தார். எனது நீண்ட நாள் தோழி அவர். குறைந்த காலம் இருவரும் காதலித்தோம். பின்னர் இது சரியாக இருக்காது என்று நினைத்ததால் அதை முடித்துக்கொண்டேன்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து ராணா – திரிஷா இருவரும் காதலித்து உண்மை என்பது நிரூபணம் ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here