பச்சோந்தி வேடம் போடும் சங்கி சந்தானம்… இனி உனக்கு மக்கள் ஆப்பு வைப்பார்கள்… சினிமா பிரபலம் எச்சரிக்கை..

0
Follow on Google News

நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படம் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ளது. முன்னதாக டிக்கிலோனா படத்தில் இணைந்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுளள்னர். முன்னதாக படத்தின் ட்ரெயிலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் ட்ரெயிலர் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

வடக்குபட்டி ராமசாமி படத்தின் டீசரில் தந்தை பெரியாரை விமர்சிக்கும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறி சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, அதில் சந்தானம் அவர்கள், நான் அந்த ராமசாமி இல்லை என்று கூறி கூறியிருப்பார். இது அவர் பெரியாரைக் குறித்து தான் கூறியிருக்கிறார் என்று விமர்சித்து குறித்து இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சந்தானம், இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சந்தானம், “2 இயக்குநர்கள் படங்களில் நான் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பேன். ஒன்று ப்ரேம் ஆனந்த், மற்றொன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி. காரணம் படத்தில் அவ்வளவு ஹியூமர் இருக்கும். இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்துக்குப் பிறகு எனக்கு மற்றொரு ஹிட் தேவைப்படுகிறது.

அது கார்த்திக் மூலம் கிடைக்க இருப்பது மகிழ்ச்சி. படத்தில் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறியது. இதில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்றால், நானும், இயக்குநரும் கவுண்டமணியின் ரசிகர்கள். ‘டிக்கிலோனா’ அவருடைய டயலாக். அப்படித்தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் வசனம் தான் இது. நான் சினிமாவுக்கு வந்தது நோக்கம் மக்களாகிய உங்களை சிரிக்க வைக்க வேண்டும்.

மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும், தாக்கி பேச வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. கடவுளுக்குத் தெரியும். காசு, பணத்தை நோக்கி போக வேண்டியிருந்தால் போயிருப்பேன். அடுத்து புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம். ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள்.

இதேதான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோலதான், இந்தக்கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சார் வந்தார். எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம்.” என்றார். இதனைத் தொடர்ந்து சந்தானம் பேசியது குறித்து தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

சந்தானத்தின் இந்த விளக்கம் குறித்து விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘ப்ரமோஷனுக்காக எதையும் செய்வது ப்ரமோஷன் ஆகாது. ரெட் ஜெயண்ட் உங்கள் படத்தில் இருந்து பின் ஜெயண்ட் அந்த ப்ரமோஷனால்தான். எல்லாரும் ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். ஆனால் உதயநிதியின் நண்பன், பாமக ஆதரவாளன், சங்கி என மூன்று பக்கமும் சொம்பு தூக்கும் ஆள் கோடம்பாக்கத்தில் நீங்கள் ஒருவர்தான். அனைவருக்குமான காமடியான இருக்கும் வரைதான் இங்கே மதிப்பு. சாதி, மதம், ஆளுங்கட்சி என கலர் கலராக பச்சோந்தி வேடம் போட்டால்.. மக்கள் ஒதுக்கி விடுவார்கள். அது சூப்புற ஸ்டாராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.