அக்காவுக்கு போட்டியாக சத்தமே இல்லாமல் களம் இறங்கிய …என்ன செய்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் ஏற்கனவே இரண்டு படங்கள் இயக்கி தோல்வியை தழுவியவர். அதே போன்று ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா அவருடைய தந்தை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோன் இருவர் நடிப்பில் கோச்சடையான் என்கின்ற அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி மிக பெரிய தோல்வியை சந்தித்தார்.

கோச்சடையான் படம் மூலம் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் அவருடைய இளைய மகள் சௌந்தர்யா. இப்படி தந்தையை அடையாளத்தை பயன்படுத்து சினிமாவில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொண்டாலும், ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் சினிமாவில் பெயர் சொல்லும்படி இடம் பிடிக்க முடியவில்லை. . இந்நிலையில் கனவர் தனுஷை விட்டு பிரிந்துள்ள ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை படத்தை இயக்கி தோல்வியை சந்தித்தவர். இந்நிலையில் மீண்டும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு மீண்டும் லால் சலாம் படத்தில் வாய்ப்பை உருவாக்கி கொண்டார். இந்நிலையில் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இளைய மகள் சௌந்தர்யா அக்கா ஐஸ்வர்யா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளதை தொடர்ந்து அவரும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சௌந்தர்யா ஏற்கனவே கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கி தோல்வியை தழுவியிருந்த நிலையில், மீண்டும் இயக்குனராக படம் எடுக்க தொடங்கினால் தந்தை ரஜினிகாந்த் ஏற்று கொள்ளமாட்டார் என்பதை உணர்ந்து, படம் தயாரிக்க முடிவு செய்து, அதற்கு முன்னோட்டமாக வெப் சீரியஸ் தயாரிக்கும் வேலைகளில் சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் சௌந்தர்யா.

அமேசான் பிரைம்க்காக புது முக இயக்குனரை வைத்து வெப் சீரியஸ் தயாரித்து வரும் சௌதர்யா, இதன் பின்பு சினிமாவில் படம் தயாரிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் சம்பாரித்த சொத்துக்களை பாதுகாத்தால் மட்டுமே அவருடைய இரண்டு மகள்களும் ஆஹா..ஓஹோ..என்று வாழலாம், ஆனால் இரண்டு மகள்களும் போட்டி போட்டு கொண்டு ரஜினிகாந்த் சம்பாரித்து வைத்த பணத்தை காலி செய்து வருகிறார் என்றே சொல்லலாம்.

ஏற்கனவே இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது தந்தையை வைத்து அனிமேசன் படம் எடுக்க விரும்பி பெரிய பட்ஜெட்டில் கோச்சடையான் படத்தை எடுத்து மிகப்பெரிய நஷ்டத்தை தந்தை ரஜினிகாந்துக்கு பரிசளித்தார் சௌந்தர்யா. இதன் பின்பு சௌந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 பெரும் நஷ்டம், இத்துடன் சினிமா பக்கமே வர கூடாது என தந்தை தெரிவிக்க, அடுத்ததாக பல கோடி முதலீட்டில் ஹூட் என்கிற செயலி ஒன்றை அறிமுகம் செய்தார்.

இது பேஸ்புக், டிவீட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு இணையாக வரவேற்பு பெற்று தானும் ஒரு தொழில் அதிபர் என பெயர் பெற்று விடலாம் என நினைத்த சௌதார்யாவுக்கு பெரும் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க இருக்கும் சௌந்தர்யா அவர் தேர்தெடுக்கும் கதை, இயக்குனரை பொறுத்து அவருடைய வெற்றி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.