லாஜிக்கே இல்லை.. படம் பார்க்கும் ரசிகர்களை முட்டாள் என நினைத்தாரா வெற்றிமாறன்.?

0
Follow on Google News

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தை குறிப்பிட்ட ஒரு தரப்பினார் ஆஹா .. ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினாலும், கூட அந்த படத்தில் உள்ள ஏகப்பட்ட குளறுபடிகளையும், தவறுகளையும் பலரும் சுட்டி காட்டி விமர்சனம் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

விடுதலை படத்தை பார்த்த நிகழ்வை பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல சமூக செயற்பாட்டாளர் ஒருவார் தெரிவிக்கையில், விடுதலை படத்தில் கவுதம் மேனன் காவல் துறை அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு சந்தேகப்படுபவர்களை போலீஸ் வீடு புகுந்து இழுத்துக் கொண்டு செல்வது, அவர்களை கொடூரமாகத் தாக்கும் சில காட்சிகளுக்கு மணிரத்னம் பட ஹீரோக்கள் ஹெட்ஃபோனுடன் பைக் ஓட்டும், ரோட் ட்ரிப் போகும் காட்சிகளில் வரும் ஒரு பெப்பியான பின்னணி இசை ஒலிக்கிறது.

திரையில் நான்கைந்து பேர் குண்டு பட்டுச் சாவதை என்னுடன் சேர்த்து எங்கள் வரிசையில் பலரும் ஒரு விதமாக லேசாக ஆடிக் கொண்டே பார்த்துக் களித்தோம். முப்பது வருடங்களாகப் புகைப்படம் கூடக் கிடைக்காத அளவுக்கு மறைந்து வாழ்ந்து இயங்கும், இயக்கும் பெரிய கை ஒருவர் தன் சகாக்களோடு ஆயுதங்கள் சகிதம் போலீஸ் முழுக்கக் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் ஊரில் ஒரு வீட்டின் மாடி போர்ஷனில் கேஷூவலாகக் குடியிருக்கிறார்.

அது ஒரு போலீஸ்காரருக்குத் தெரிந்து போய் விட்டது என்பது தெரிந்தும் வேறு இடம் மாறாமல் இருங்கடா ஆளுங்கள கூட்டியாறேன் என்று அந்த போலீஸ்காரர் போகிற வரை கூறுகெட்டத்தனமாக அங்கேயே குடியிருக்கிறார்கள். இதில் இவர்களுக்கு லைவ் கமெண்ட்டரி கொடுக்க போலீஸிலேயே கையாள் ஒருவர் வேறு இருக்கிறார். மூனு மாசம் நோட்டீஸ் குடுக்காம வீட்ட காலி பண்ணா அட்வான்ஸ திருப்பித் தர மாட்டேன் என்று வீட்டு ஓனர் சொல்லி விட்டார் போல. பாவம்.

அந்தப் பெரிய கை வெளியேவும் ஃப்ரீயாக உலாவுகிறார். சூரி அவரை அவரது கூட்டத்துடன் பார்க்கும் ஒரு காட்சியில் துண்டை வைத்து லேசாக முகத்தைப் போர்த்திக் கொள்கிறார். தலைக்கு மேல் துண்டைப் போட்டுக் கொண்டு அங்கனக்குள்ளேயே ஜாலியாக சுத்துவது தான் தலைமறைவு வாழ்க்கை என்று குறியீட்டால் உணர்த்த விரும்புகிறார்கள் போலிருக்கிறது. என லாஜிக்கே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள விடுதலை படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.