பொறாமையையின் வெளிப்பாடு… தரம் தாழ்த்திக்கொணட ரஜினி…

0
Follow on Google News

ரஜினியின் ஆன்மீகம் என்பது அதீத சுயநலம் என்பது ஜெயிலர் படத்தின் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் மூலம் வெளிப்பட்டு விட்டது என்கிற கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில். ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை மற்றும் விஜய் மீது தாக்குதல் என்பதிலேயே அவருடைய முழு பேச்சும் இருந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ள ஆடியோ நிகழ்வை நேரில் பார்த்தவர்கள்.

தன்னுடைய போட்டியாளராக விஜய்யை மனதில் வைத்து அவரை காக்கா என்று மறைமுகமாக விமர்சனம் செய்வது, தன்னை விமர்சனம் செய்கின்றவர்களை நாய் என்று மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் ரஜினி பேசியது அவரது தரத்தை அவரே தாழ்த்தி கொள்வது போன்று அமைத்துள்ளது என்கின்ற கருத்தும் உலா வருகிறது.

மேலும் விலங்குகள், பறவைகள் மீது மனிதர்களின் குணங்களை திணிப்பது சிறுபிள்ளைத்தனம். ‘நரி தந்திரமிக்கது’, ‘புலி வீரமிக்கது’ என்பதெல்லாம் குழந்தைத்தனம். எல்லா மிருகங்களும் தங்களது உணவுக்காக தந்திரங்களை மேற்கொள்ளும், பாயவும் செய்யும். அந்த வகையில் காக்கா என்றால் இழிவானது, பருந்து உயர்வானது என ரஜினி பேசியதும் அப்படித்தான் என கூறும் அரசியல் பார்வையாளர்கள்.

உண்மையில் காக்காவைத்தான் பருந்து தொல்லை செய்யும். இதை மாற்றிச் சொல்கிறார் ரஜினி. இப்படி இவர் அறியாமையில் இருக்கக் காரணம், அறிவை மேம்படுத்திக் கொள்ளத் தேவை இல்லாத சூழல்தான் என பதிலடி கொடுத்து வரும் விஜய் ரசிகர்கள். மேலும் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை, ஏதோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கிடைத்த பதவி போல நினைக்கிறார் ரஜினி.

வசூல் ரீதியாகத்தான், ரஜினி இதுவரை சூப்பர் ஸ்டார் என்றார்கள். அந்த வகையில் இவர் காலத்திலேயே , இவருக்கு முன்பே, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர் கமல். ஆனால், தரமான படங்கள் அளிக்க வேண்டும் என்கிற கலை ஆர்வத்தில், பார்வையற்றவராக , மன மாறுபாடு உள்ளவராக நடித்தார் கமல், இவற்றை பெரும்பாலான ரசிகர்கள் ஏற்கவில்லை. வசூல் குறைந்தது. அடுத்த இடத்துக்கு வந்தார் கமல்.
அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கமல் கவலைப்படுவே இல்லை என தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்.

மேலும் ரஜினியின் சமகால போட்டியாளரான கமல்தான் சூப்பர் ஸ்டார். அவர் தன்னை முன்னிறுத்தியே படங்களில் நடித்தார். ஆனால் ரஜினியோ, தன்னை நம்ப மாட்டார். அந்த நேரத்தில் வெற்றிப்படம் உச்சத்தில் இருக்கும் இயக்குநர், நடிகை, இசை அமைப்பாளர், காமெடியன்களையே தனது படத்துக்குத் தேர்ந்தெடுப்பார். அப்படி உச்சத்தில் இருப்பவர்களை வைத்தே, தனது உச்ச நடிகர் பட்டத்தை தக்க வைக்க கூடியவர் ரஜினி என விமர்சிக்கும் சினிமா ரசிகர்கள்.

ஆன்மீக வாதியாக தன்னை காட்டி கொள்ளும் ரஜினிகாந்த் இன்று அவரை விட வசூலில் சாதனை படைத்து வரும் விஜய், மேலும் பல வருடங்களாக நான் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என ஏமாற்றி வந்த ரஜினிகாந்த், தற்பொழுது விஜயின் அதிரடி அரசியல் என்ட்ரி. என இப்படி சினிமா மற்றும் அரசியல் என அதிரடியாக காய் நகர்த்திவரும் விஜய் மீது உள்ள பொறாமையின் வெளிப்பாடு தான் ரஜினி ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய பேச்சு என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.