விஜய் – ரஜினி உச்சகட்ட மோதல்… ரஜினி பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சி…

0
Follow on Google News

ரஜினி நடிப்பில் வெளியாக ஜெயிலர் பட பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளில் ரஜினி விஜய்யை சீண்டியிருப்பது பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. சுப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் வலிந்து எடுக்க நினைப்பது எவ்வாறு நாகரீகமில்லையோ அதே போல்தான் ரஜினி அதற்கு காட்டி வரும் பிரதிபலிப்புக்களும் நாகரீகமற்றதாகவே உள்ளது என்கிற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதாவது, ரஜினி அரசியலுக்கு வராத ஒரு நிலையில், விஜய் அந்த இடத்தைப் பிடித்து விடுவாறோ என்றவோர் பொறாமைக் குணம் ரஜினியுள் ஏற்பட்டு விட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அரசியல் பார்வையாளர்கள். தான் அடையாத அந்த அரசியல் இலக்கை இன்னொரு நடிகர் அடையக் கூடாது என ரஜினி எண்ணுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், கமல் அரசியலுக்கு வரும் போது கூட அவருக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட ரஜினி பேசவில்லை.. தனது ரசிகர்களின் வாக்குகள் கமலுக்கு சென்று விடக்கூடாது என்பதில் ரஜினி மிகவும் கவனமாகவே இருந்தார் .. இப்படியான ஒரு நிலையில்தான் இப்போது விஜய் அரசியலுக்கு வருவதை ரஜினியால் பொறுத்து கொள்ள முடியாததால் ரஜினி எதிர்வினையாற்றி வருவதாக கூறுகிறார்கள்.

விஜய் தன்னை அடுத்த ரஜினியாக இனங்காட்டும் வகையில் தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் ரஜினி பாணியை பின்பற்றி வந்தமை அனைவரும் அறிந்ததே, அதையிட்டு ரஜினி கூட அலட்டிக் கொள்ளவில்லை.. ரஜினி பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட நிலையில், விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு எழுந்த கையோடு ரஜினி கிளர்ந்தெழத் தொடங்கியதை, விஜய் கூட இதனை எதிர்பார்த்திருக்கமாட்டார் என தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள்.

ரஜினியின் ஸ்டைலை பின்பற்றுவதால் ரஜினி ரசிகர்களின் ஆதரவும் தனக்கு கிட்டும் என விஜய் எதிர்பார்த்திருப்பார்.. ஆனால், அது நடந்து விடக்கூடாது என்பதில் ரஜினி குறியாக இருந்துள்ளார் என்பது தற்போது தெளிவாகி விட்டது.. விஜய் தன்னை ‘ஓவர்டேக்’ செய்யக் கூடாது என ரஜினி எண்ணுகின்றார் என்பதையே இது உணர்த்துகின்றது.. அரசியலில் தன்னால் தொட முடியாத இடத்தை கமல் மட்டுமல்ல விஜய்க்கும் தொட விடமாட்டேன் என்பது போல் ரஜினி பதிலடியில் இறங்கி விட்டார்..

அதன் பிரதிபலிப்புதான் ‘ஜெய்லர்’ படத்தின் ‘ஹுக்கும் ..’ பாடலின் மூலம் ரஜினி வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞையாகும் … எனவே, விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்ற சிக்னலைத்தான் ரஜினி தனது ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.. இதன் மூலம் விஜய் மீதான தனது ரசிகர்களின் ஈடுபாட்டிற்கும் தடைக்கல்லை போட்டது மட்டுமல்லாமல் ஒரு பிளவையும் ஏற்படுத்தி விட்டார் ரஜினி என தெரிவிக்கும் அரசியல் பார்வையளர்கள்.

‘ஜெய்லர்’ ஆடியோ வெளியீட்டு விழாவின் போது ரஜினி இந்த பிரச்சினையை பெருத்தன்மையுடன் அணுகி சில கருத்துக்களை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அங்கும் கூட விஜய்யை சீண்டும் விதமான கருத்துக்களையே ரஜினி தெரிவித்துள்ளார். ஆக! ஜெய்லர் படப் பாடல் ரஜினியின் ஒப்புதலுடன் தான் எழுதப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது ..

ரஜினி கையாளுகின்ற இந்த பதிலடி விஜய் திட்டமிட்டிருக்கும் அரசியல் நகர்வில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடிய சாத்தியங்களும் உள்ளன. ரஜினியின் ரசிகர்களையும் நம்பியே விஜய் அரசியல் நகர்வை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பார், ஆனால் ரஜினியின் இந்த எதிர்மறையான வெளிப்பாடானது ரஜினி ரசிகர்களை விஜய்யிடமிருந்து தூர விலக்கி விட்டது என்றே கணிக்க முடிகின்றது.

அதே நேரத்தில் விஜய் ஏன் தனக்கென தனி அடையாளத்தை பேணாமல் ரஜினியின் பிரதியாக இருக்க முயல்கின்றார் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க நல்ல மனிதானம் மிக்கவர், ரசிகர்களை மதிக்க தெரிந்தவர், தலைக்கனம் இல்லாதவர், எளிமையானவர், எல்லோருடனும் சகஜமாக பழகுபவர் என நற்பெயரை சம்பாதித்த ரஜினி இந்த விஜய் விடயத்தில் மாத்திரம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளதது ஏன் என்ற கேள்வி மறுபுறம் எழுப்பி வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.