விஜய் பேரை கேட்டதும் டென்ஷனான நெபோலியன்… அந்த அளவுக்கு அசிங்கப்படுத்திய விஜய்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் நெபோலியன், தொடர்ந்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து, 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அனைவரிடமும் மரியாதையுடன் பழக கூடிய நடிகர் நெபோலியன், அரசியலில் ஈடுபட்டு மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இரன்டு மகன்களில், ஒரு மகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட, குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கிய நெபோலியன், அங்கேயே தொழில் தொடங்கி வெற்றிகரமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். பெரும்பாலும் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் நெப்போலியன் அவ்வப்போது சினிமாவில் கதை பிடித்திருந்தால், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அமெரிக்காவில் இருக்கும் நெபோலியன் வாரம் ஒருமுறை தனது அமெரிக்க நன்பர்களை நேரில் அழைத்து சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்வது வழக்கம், அப்படி சமீபத்தில் நடந்த அவருடைய நண்பர்கள் சந்திப்பின் போது. ஒரு நண்பர் நடிகர் விஜய் குறித்து பேச்சு எடுக்க செம்ம டென்ஷன் ஆன நெபோலியன், மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் எதற்கு மரியாதை தெரியாத ஒரு நபரை பற்றி பேச வேண்டும் என தெரிவிக்க, உடனே சிறிது அமைதிக்கு பின்பு வேறு பேச்சை பேசியுள்ளனர்.

இந்நிலையில் விஜய் பெயரை கேட்டாலே ஏன் நெபோலியனுக்கு இந்த கோபம் என விசாரித்ததில், போக்கிரி படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்தார் நெபோலியன். அப்போது அமெரிக்காவில் இருக்கும் நெபோலியன் நண்பர்கள் சிலர் இந்தியா வந்துள்ளனர், நெபோலியன் படப்பிடிப்பில் இருப்பதை அறிந்து போக்கிரி படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளனர். அங்கே நெபோலியன் உடன் அரட்டை அடித்துவிட்டு நடிகர் விஜய் உடன் ஒரு புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் நெபோலியன் நண்பர்கள்.

இதற்கு உடனே நடிகர் விஜய் இருக்கும் கேரவனுக்கு நண்பர்களை அழைத்து சென்றுள்ளார் நெபோலியன், கேரவன் உள்ளே செல்ல கதவை திறக்க நெபோலியன் சென்ற போது, அங்கே இருந்த பாதுகாவலர் நெபோலியனை தடுத்து நிறுத்தியுள்ளார், விஜய் சார் பார்க்கணும் என நெபோலியன் தெரிவிக்க, அதெல்லாம் முடியாது என பாதுகாவலர் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாவலருக்கும் நெபோலியன் இடையில் வாக்குவாதம் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் சுற்றி வேடிக்கை பார்க்க, அமெரிக்காவில் இருந்து வந்திருந்த நெபோலியன் நண்பர்கள் அங்கே நடந்த சண்டையை பார்த்து கொண்டிருக்கின்றனர். திடீரென கேரவன் கதவை திறந்து வெளியே வந்த விஜய், அவர் தான் என்னை பார்க்க முடியாது என்று சொல்கிறார், பிறகு ஏன் இங்க மேனஸ் இல்லாமல் சத்தம் போட்டு தொந்தரவு செய்யிறீங்க என நெபோலியனை பார்த்து கோபத்துடன் பேசிவிட்டு, மீண்டும் கேரவன் உள்ளே சென்றுவிட்டார் விஜய்.

இது அங்கே இருந்த நெபோலியன் நண்பர்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவர் மத்தியிலும் மிக பெரிய அவமானத்தை நெபோலியனுக்கு பெற்று தந்தது. ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்த நெபோலியன் நண்பர்கள் அவரை சமாதனம் செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட அவமானத்தை இன்றும் மறக்காமல் இருந்து வரும் நெபோலியன், அதனால் தான் விஜய் பெயரை கேட்டதும் டென்ஷனாகி உள்ளார் என கூறப்படுகிறது.

ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா அஜால் குஜால்… கள்ளகாதலர்கள் போல் கையும் களவுமாக மாட்டியது எப்படி.?