வம்படியாக சூர்யாவுக்கு எதிராக அராஜகம் செய்வதா.? இனியும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்..பாமகவை கடுமையாக எச்சரித்த கருணாஸ்

0
Follow on Google News

ஜெய்பீம் படம் குறித்து தற்போது பாமக மற்றும் நடிகர் சூர்யாவுக்கு எதிராக எழுந்துள்ள பெரும் சர்ச்சை குறித்து நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை. அவர்களின் அறப்போராட்டத்தை மெய்யாக படம் பிடித்ததால் வெற்றியடைந்தது. ஆனால் வம்படியாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராகவும், நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் பா.ம.க.வினர் அராஜகம் செய்கின்றனர்,

இந்த திரைப்படத்தை சாதி ரீதியான சிக்கலுக்குள் அடைக்கின்றனர்; விண்வம்பு செய்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தது. தங்களது சமுதாயத்தை புண்படுத்தும்படியான காட்சிப்படம் திரைப்படத்தில் இடம்பெற்றதாய் பா.ம.கவினர் குரல் கொடுத்தனர். அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர், அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா அந்த காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார். பிரச்சனை முடிந்தது.

ஆனால் மீண்டும், மீண்டும் பா.ம.க.வினர் வம்படி செய்வதும், திரைப்பட சுவரொட்டியை கிழிப்பதும், திரையரங்களில் படம் ஓடவிடாமல் தடுப்பதும் அரம்பத்தனத்தின் உச்சம், தொடர்ந்து இதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள்! நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்துவருவதும், சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பா.ம.க மாவட்டச் செயலாளர் அறிவிப்பதெல்லாம், என்ன அரசியல் அறம் என்று புரியவில்லை.

எதாவது ஒன்றில் அரசியல் சூழலில் சரிக்கினால், அடுத்து உடனே எதாவது செய்து பரப்பரப்பாக வேண்டும் என்ற அரசியல் நோக்கில் இப்போது பாம.க. ஜெய்பீம் திரைப்படத்தை பயன்படுத்தி இறங்கியுள்ளது. அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு நடிகர் சூர்யா தமிழ்ச்சமூகத்திற்கு பங்காற்றுகிறார். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும் படி செய்து பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

தமிழ்ச்சமூகத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் முன்னத்தி ஏராக நிற்கிறார். ஜெய்பீம் திரைப்படத்தோடு அவர் நின்றுவிடவில்லை அதற்கும் மேலாக அந்தப் படத்தில் வாழ்ந்த இருளர் சமூக மேம்பாட்டிற்கு ஒரு கோடி நிதி தருகிறார். இப்படிப்பட்ட மனித நேயரை சமூக அக்கறை கொண்ட கலைஞனை இனி விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!