மூத்த நடிகர் மற்றும் இயக்குனர் மறைவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
Follow on Google News

இயக்குனரும் நடிகருமான ஆர் என் ஆர் மனோகர் மாரடைப்புக் காரணமாக சென்னையில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாக, நடிகராக மற்றும் இயக்குனராக பல துறைகளில் பணியாற்றி புகழ்பெற்றவர் ஆர் என் ஆர் மனோகர். மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ள இவர் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

61 வயதாகும் இவர் இன்று சென்னையில் மாரடைப்புக் காரணமாக காலமாகியுள்ளார். இவரின் சகோதரர் என் ஆர் இளங்கோ திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மனோகரின் மறைவுக்கு திரைத்துறையினர் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.