தலைக்கனத்தில் ஆடிய அஜித்… முடிந்தது அஜித்தின் சினிமா கேரியர்..

0
Follow on Google News

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா, தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்து வருகிறது, ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பலர் சினிமா துறையை விட்டு விலகி நிற்க, மிகப்பெரிய படங்களை எடுப்பதற்கு தயாரிப்பாளர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை வாழ வைக்க வந்தவர்கள் லைக்கா என்று சொல்ல அளவுக்கு பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்தவர்கள் லைக்கா.

அஜித்துடன் விடா முயற்சி படத்தை தற்பொழுது தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் அஜித்தின் அட்ராசிட்டியால் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே அஜித்துக்கு மக்கள் கூட்டம் என்றால் அலர்ஜி, அந்த வகையில் மக்களையும் ரசிகர்களையும் நேரில் சந்திக்க விருப்பம் இல்லாத ஒரு வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அஜித்.

தன்னுடைய படப்பிடிப்பில் எந்த கூட்டம் இல்லாமல் நடக்க வேண்டும், தனக்கு பிடித்த இடத்தில் நடக்க வேண்டும் என விரும்பிய அஜித் அஜர்பைஜானே தேர்வு செய்துள்ளார். தயாரிப்பு நிறுவனமும் மேலும் அந்தப் படத்தின் இயக்குனரும் அஜித் விருப்பப்பட்டு விட்டாரே என அஜர்பைஜானில் படபிடிப்பு தொடங்கியவர்கள், அங்கு அடிக்கடி பணி, புயல், மழை என பல்வேறு இயற்கை மாற்றத்தினால் தகுந்த முறையில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இடையில் இடையில் நாட்கள் இடைவெளி விட்டு அந்த படத்தை தொடங்குகிறார்கள், இதில் அஜித்துக்கு இடைவெளி விடுவதால் மகிழ்ச்சியாக அஜர்பைஜான் அருகில் உள்ள ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று நேரத்தை செலவிடுகிறார். ஆனால் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி பட குழுவினரின் மொத்த செலவும் லைக்கா நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிலையில் முக்கியமான ஒரு லைட் இருந்தால் தான் படப்பிடிப்பை நடத்த முடியும் என பட குழுவினருக்கு தேவைப்பட்டுள்ளது. அந்த லைட் இல்லை என்றால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல், சென்னையில் இருந்தும் வரவழைத்தால் குறைந்தது மூன்று நாட்களுக்கு மேல் ஆகும், அந்த மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தவில்லை என்றால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

இந்நிலையில், அஜர்பைஜான் அருகில் உள்ள துருக்கிக்கு சென்று உடனே அந்த லைட்டை வாங்கி வந்துள்ளார்கள். ஆனால் அந்த லைட்டின் விலையைப் பார்த்த தயாரிப்பு நிறுவனம் தலைசுற்றி கீழே விழுந்து விட்டதாம். அந்த அளவுக்கு பல மடங்கு அதிக விலை கொடுத்து லைட் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது அஜித் இடம் சிக்கி தவித்து வரும் லைக்கா நிறுவனம், இந்த படத்தை எடுத்து முடித்து போதும் என்றும், அதே நேரத்தில் தற்பொழுது அஜித்தின் சம்பளம் இந்த பட்ஜெட் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பு செலவு சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அஜித்திடம் கால் சீட் வாங்குவது பெருசு இல்லை, ஆனால் அவர் சொல்வதற்கெல்லாம் ஈடு கொடுத்து போக வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இருப்பதால், அடுத்து அஜித்தை வைத்து படம் எடுக்க நிச்சயம் தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவையில் அஜித்தின் ஆணவத்தினால் தற்போது அவருடைய சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடுமோ என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜயகாந்த மறைவுக்கு எட்டி கூட பார்க்காத அஜித், இதுவரை இரண்டு வரியில் வருத்தம் கூட தெரிவிக்கா அஜித்தை அவருடைய ரசிகர்களே, இதுவரை அஜித்தின் ரசிகர்களாக இருந்ததற்கு வெட்கப்படுகிறோம் என பலரும் அஜித் மீது கோபப்பட்டு வரும், நிலையில், தற்பொழுது அஜித்தை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனம் படாத பாடு பட்டு வரும் நிலையில், அஜித்தின் சினிமா வாழ்க்கை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பலரும் விமர்சனம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.