எல்லாம் காசு பணம் தான்… அஜித் நிறுவனம் பின்னணியில் இருக்கும் வியாபாரம் தந்திரம்..

0
Follow on Google News

பைக் ஓட்டுவதில் தீராத காதல் கொண்டவர் நடிகர் அஜித்குமார். அந்த வகையில் பைக் ஓட்டுவதற்கு பின்பு தான் நடிப்பது போன்ற மற்ற செயல்கள் எல்லாம் அஜித்தின் விருப்பமாக இருக்கும். இந்த நிலையில் பைக் ஓட்டுவது தொடர்பான ஏகே மோட்டோ ரைடு என்கிற நிறுவனத்தை நடிகர் அஜித் தொடங்கியுள்ளார். இந்த செயல் நடிகர் அஜித்துக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை கொடுத்தாலும் கூட, இதன் பின்னனியில் உள்ள வியாபரம் யுக்தி குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் மட்டுமல்லாமல் சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப் பயணங்களை வழங்கும். இதற்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப் பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல் திறனை உறுதி செய்து உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ‘ஏகே மோட்டர் ரைடு’ வழங்கும் என தெரிவித்துள்ளார் அஜித்.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபு பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை ஏகே மோட்டோ ரைடு வழங்கும் என அஜித் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அஜித் மிகப் பெரிய உயரத்திற்கு பல கோடிகள் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து, உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்தவராக வருவதற்கும் காரணமாக இருந்தவர்கள் தமிழக மக்கள். இப்படி அஜித்தை தலையில் வைத்து தல தல என்று கொண்டாடிய தமிழக மக்கள் தான் அவருக்கு மிகப்பெரிய வாழ்க்கையும் பெயர் புகழ் செல்வாக்கையும் கொடுத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆனால் அஜித் சம்பாதித்த பல கோடி பணத்தில் தமிழக மக்களுக்கு ஒரு துரும்பை கூட செய்யாமல், பணம் படைத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில், அவர்களுக்கான ஒரு செயல் தான் நடிகர் அஜித் தற்பொழுது தொடங்கியுள்ள ஏகே மோட்டோ ரைடு என கூறப்படுகிறது. ஏ கே ரைட் மோட்டோ நிறுவனத்தின் மூலம் அஜித் போன்று பைக் பயணம் செல்ல ஆசைப்படுகின்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கப் போகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த நிறுவனத்தின் பின்னணியில் மிகப்பெரிய வியாபார யுக்தி உள்ளது என்கின்றனர் தொழில்துறை நிபுணர்கள். அதாவது வசதி படைத்தவர்கள் பைக் பயணம் செல்லும் பொழுது விலை உயர்ந்த பைக்கில் தான் பயணம் செய்ய முடியும், இதனால் வசதி படைத்தவர்கள் அதிக ஆர்வத்துடன் விலை உயர்ந்த பைக்கை வாங்குவது மூலம் குறிப்பிட்ட சில பைக்கின் வியாபாரம் அதிகரிக்க செய்யவே, குறிப்பிட்ட சில பைக் நிறுவனங்கள் ஏகே மோட்டோ ரைடுக்கு ஸ்பொன்சர் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் பணக்காரர்களை குறி வைத்து தான் இந்த ஏகே மோட்டோ ரைடு நிறுவனத்தை அஜித் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் அஜித் நினைத்தால் கர்நாடகாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் போன்று இலவசமாக கல்வி கற்றுக் கொடுப்பதற்கு இங்கே தமிழகத்தில் ஒரு பள்ளியை கட்டலாம், மருத்துவமனையை கட்டலாம்.

இப்படி ஏழை எளிய மக்கள்கள் பயன்படும் வகையில் அஜித் செய்தால் அவருக்கு மட்டுமல்ல அதனால் பயனடையும் பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் ஏகே மோட்டோ ரைடு என்கின்ற பெயரில் பணக்காரர்களை மகிழ்ச்சி படுத்தும் விதத்திலும் மேலும் வியாபார நோக்கில் தான் அஜித் ஏகே மோட்டோ ரைடு என்கிற நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது