நள்ளிரவு ஒரு மணிக்கு நடு ரோட்டில் சிக்கி கொண்ட அஜிகுமார்.! கார் உள்ளே உடன் இருந்தது யார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் அஜித் குமார், இவர் பற்றி வெளிவராத பல ரகசியர்கள் நம்மை ஆச்சரிய பட வைக்கும் விதத்தில் இருக்கும், அந்த வகையில் இப்படி பட்ட மனிதரா நடிகர் அஜித் குமார் என நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும், இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்த போது அவரிடம் ஏன் எப்போதும் போல் இல்லாமல் இப்ப ரெம்ப சோகமாக இருக்கிறீர்கள் என அஜித் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பத்திரிகையாளர் தயங்கிய போது, அஜித் வற்புறுத்தலின் பேரில் தான் கஷ்டத்தை தெரிவித்துள்ளார், தான் ஒருவரிடம் இரண்டு லட்சம் பணம் வாங்கி உள்ளதாகவும், தற்போது அந்த கடனை திருப்பி தரமுடியாமல் கடும் நெருக்கடியில் இருப்பதாக தெரிவிக்க, உடனே கடன் கொடுத்தவரை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்டவரின் பாத்திரம் அனைத்தையும் வந்து கொடுத்துவிட்டு அவர் கொடுக்கவேண்டிய பணத்தை வாங்கி கொண்டு போக சொல்லி, அந்த பணத்தை கொடுத்து பாத்திரத்தை மீட்டு தந்துள்ளார் அஜித்.

இதே போன்று, நடிகர் அஜித்க்கு சில வித்தியாசமான நடவடிக்கைகள் உண்டு, அதில் நள்ளிரவில் வாகனத்தில் சென்னையை சுற்றி வருவது, அந்த வகையில் ஒரு நாள், அஜித் வீட்டை கட்டிய இன்ஜினியர் பிரதாப் மிக நெருக்கமாக நடிகர் அஜித் உடன் பழக கூடியவர் என்பதால், நள்ளிரவு பிரதாப் சொந்தமான இண்டிகா காரை எடுக்க சொல்லி பிரதாப் வாகனத்தை ஓட்ட, மறுபுறம் அஜித் அமர்ந்து சென்னையை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வாகனத்தில் பெட்ரோல் மிக குறைவாக இருப்பதை அறிந்த பிரதாப் தி.நகர் அருகே இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுவிட்டு சென்று விடலாம் என சென்ற போது, சுமார் பெட்ரோல் நிலையம் 600 மீட்டர் இருக்கும் நிலையில் பெட்ரோல் இல்லாமல் வாகனம் நின்று விட்டது, இதனை தொடர்ந்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போன பிரதாப், சார் நீங்க வண்டிய ஓட்டுங்க நான் தள்ளிட்டு வருகிறேன் என்று சொல்லிருக்கிறார்.

ஆனால் அஜித், அய்யோ..நீங்க ஓட்டுங்க, நான் வண்டியை தள்ளி கொண்டு வருகிறேன் என தெரிவித்து, நள்ளிரவு ஒரு மணியளவில் சுமார் 600 மீட்டர் வண்டியை தள்ளி கொண்டே அஜித் சென்ற தகவலை பிரதாப் தனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்து அஜித் குறித்து ஆச்சரியப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதாப் நண்பர் சமீபத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.