7 நாள் கெடு விடுத்த அண்ணாமலை IPS.! ஒரே நாளில் படுத்தே விட்ட திமுக.? என்ன மிஸ்டர் உதயநிதி இது.?

0
Follow on Google News

திமுக அவர்களின் சாதனைகளை கூறி அரசியல் செய்வதை தவிர்த்து, பாஜக மற்றும் மோடி மீது அவதூறுகளை பரப்பி அரசியல் செய்து வருவது வழக்கம், இதற்கு முன் திமுகவின் இந்த அவதூறு அரசியலை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்க திமுகவின் ஆட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது, அதன் காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி எதிர்ப்பு மற்றும் பாஜக எதிப்பு ஆகியவற்றை வைத்து வெற்றியும் பெற்றது திமுக.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழக பாஜகவில் நடந்த அதிரடி மாற்றம், திமுகவின் ஒவ்வொரு செயலுக்கு தமிழக பாஜகவினர் தக்க பதிலடி கொடுத்து வருவதை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது திமுக. சில மாதங்களுக்கு முன் திமுக எம்பி கனிமொழி ஹிந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்டதாக ” ஹிந்தி தெரியாது போடா” என வாசகம் அடங்கிய டீசர்ட் வெளியிடப்பட்டு திமுக சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள பட்டது.

ஆனால் அதற்கு தமிழக பாஜகவினர் “தமிழ் பேசும் இந்தியன்டா.”, மற்றும் “ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும்” என வாசகம் அடங்கிய டீசர்ட் அனிந்து பாஜகவினர் பதிலடி கொடுத்ததை தொடர்ந்து டீசட் விவகாரத்தை கைவிட்டனர் திமுகவினர், இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் சில முக்கிய இடங்களில் பாஜக அரசுக்கு எதிராக சுவர் விளம்பரம் செய்து வரும் திமுகவினர் திட்டமிட்டு அதில் பாஜகவுக்கு எதிராக சில அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரில் இது போன்று சுவர் விளம்பரம் செய்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, அதில் கோ பேக் மோடி என்றும் சுவர் விளம்பரம் செய்திருந்தார், இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS , இன்றைய தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் அந்த சுவர் விளம்பரம் அழிக்கப்படவில்லை என்றால், 8வது நாள் ஐந்து கட்சி அம்மாவாசை என்றும், சுடலை ராஜா என்கிற பெயரை எழுதுவோம் என எச்சரித்தார், இதனை தொடர்ந்து அண்ணாமலை IPS விடுத்த 7 நாட்கள் கெடு வரை காத்திருக்காமல், திமுகவினர் உடனே கரூர் மாவட்டத்தில் வரையபட்ட சுவர் விளம்பரத்தை அழித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாஜகவின் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் திமுக படுத்தே விட்டது என வலைதளவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர், மேலும் இது போன்ற அவதூறு சுவர் விளம்பரங்களை ஊக்கப்படுத்தி வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை என்ன மிஸ்டர் உதயநிதி இது .? என்று சுவர் விளமபரம் அளிக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்து பாஜகவினர் கிண்டல் செய்து வருபவது குறிப்பிடத்தக்கது.