பாஜகவில் முக அழகிரியா.? அவர் எங்க அப்பாவை தோற்கடித்தவரே.! கடும் பீதியில் PTR தியாகராஜன்.!

0
Follow on Google News

வருகின்ற 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது, அமித்ஷா வருவதற்கு முதல் நாள் முக.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார், இந்நிலையில் முக அழகிரி தனி கட்சி தொடங்குவாரா.? அல்லது பாஜகவில் இணைகிறாரா.? என்ற பரபரப்பு நிகழ்ந்து வருகிறது, ஆனால் முக அழகிரி பாஜகவில் இணைவதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் முக அழகிரி பாஜகவில் இணைய இருக்கும் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தென் மாவட்டத்தில் இருக்கும் திமுக முக்கிய புள்ளிகள் பீதியில் உள்ளனர், குறிப்பாக மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PTR தியாகராஜன் கடும் பீதியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முக அழகிரி ஆரம்பக்கட்டத்தில் தென் மாவட்ட அரசியலில் வளர்ந்து வருவதை பொறுத்து கொள்ள முடியாத PTR தியாகராஜன் தந்தை PTR பழனிவேல் ராஜன் தொடர்ந்து முக அழகிரி குறித்து அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியிடம் புகார் தெரிவித்து கொண்டிருந்தார்.

2001 சட்டமன்ற தேர்தலின் போது முக அழகிரி தேர்தல் பணியாற்ற கூடாது என உத்தரவிட வேண்டும் என PTR பழனிவேல் ராஜன் கேட்டு கொண்டதின் பெயரில் முக அழகிரியை சற்று ஒதுங்கி இருக்க கருணாநிதி கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடும் கோபம் அடைந்த முக அழகிரி தான் யார் என நிரூபிக்க தனது ஆதரவாளர்களுக்கு மறைமுக உத்தரவின் பெயரில் 2001 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட PTR பழனிவேல்ராஜனை தோற்கடித்தார்.

இதன் பின் பெருத்த அவமானம் அடைந்த PTR பழனிவேல்ராஜன் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கிய பின் தென் மாவட்டத்தில் திமுகவின் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந்தார் முக அழகிரி, இதனை தொடர்ந்து 2006 சட்டமன்ற தேர்தலில் போது PTR பழனிவேல் ராஜனை நேரில் அழைத்து கருணாநிதி சீட் வழங்கியபோது, அதற்கு உங்கள் மகன் முக அழகிரி மதுரையில் இருக்கும் வரை நான் வெற்றி பெறமுடியாது என போட்டியிட மறுத்துள்ளதாக கூறப்பட்டது.

அதற்கு முக அழகிரியை தேர்தல் முடியும் வரை தேனி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உத்தரவிடுகிறேன், உங்களுக்கு எந்த இடையூறும் வராமல் பார்த்து கொள்கிறேன் என உறுதியளித்ததை தொடர்ந்து மீண்டும் PTR பழனிவேல்ராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் வெற்றி பெற்று ஒரு வாரத்தில் PTR பழனிவேல்ராஜன் மரணம் அடைந்தததை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து வந்த அவருடைய மகன் PTR தியாகராஜன் இடைதேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்க பட்ட நிலையில் முக அழகிரியின் கடும் எதிர்ப்பால் அமெரிக்காவுக்கே PTR தியாகராஜன் திரும்பி சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் 2011 தேர்தலுக்கு பின் திமுகவில் இருந்து முக அழகிரி ஒதுக்கப்பட்ட பின், 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் PTR தியாகராஜனை மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட அமெரிக்காவில் இருந்து களம் இறக்கினர் முக ஸ்டாலின் மருமகன் சபரீசன். இந்நிலையில் மீண்டும் முக அழகிரி அரசியல் பிரவேசம் எடுக்க உள்ளதால் மதுரை மத்திய தொகுதியில் PTR தியாகராஜனின் வெற்றிக்கான வாய்ப்பு மிக குறைவு என கூறபடுகிறது.

மேலும் மதுரை மத்திய தொகுதிக்கு கடந்த 5 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் PTR தியாகராஜன் கூறும்படி ஏதும் செய்யவில்லை என்கிற குற்றசாட்டு மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது, தற்போது சிறிய மலை பெய்தால் கூட பெரும் சிரமத்துக்கு ஆளாகும் மதுரை மத்திய தொகுதி மக்களிடம் மத்திய, மாநில அரசுகளை குற்றம் சுமத்தி அரசியல் செய்து வருவதை அந்த தொகுதி மக்கள் ஏற்று கொள்ளவில்லை, மேலும் மத்திய மாநில அரசுகளை குற்றம் கூறும் PTR தியாகராஜன் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சமூக வலைதளத்தில் தற்பெருமை பேசுவதை தவிர, தொகுதி மக்களுக்கு என்ன கிழித்தார் என கடும் கோவத்தில் உள்ளனர் மதுரை மத்திய தொகுதி மக்கள்.

இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் உள்ள சிறுபான்மை மக்கள் மத்தியில் முக அழகிரிக்கு பெரும் செல்வாக்கு இருப்பதால் அந்த தொகுதியில் உள்ள சிறுபான்மை வாக்குகளை நம்பி இருக்கும் PTR தியாகராஜனுக்கு முக அழகிரி பாஜகவில் இணைய இருக்கும் தகவல் பெரும் இடியாக விழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவாக முக அழகிரி தேர்தல் பணியாற்றுவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரை எதிர் கொண்டு வெற்றி பெற்று விடுவாரா.? அல்லது மீண்டும் அமெரிக்காவுக்கு செல்வாரா.? என்ற கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.