ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி… இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு!

0
Follow on Google News

விக்கிலீக்ஸ் மூலமாக அமெரிக்க அரசின் போர்க்குற்றங்கள் பற்றி தகவல்களை வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சே இப்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு உலகமெங்கும் ஆதரவுக்குரல்கள் எழுந்தாலும், அமெரிக்க அரசு அவரை கைது செய்ய துடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அவர் அமெரிக்காவில் இருந்து தப்பித்து இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

பின்னர் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக அவரை இங்கிலாந்து அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவரை நாடுகடத்த அமெரிக்க அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் அசாஞ்சேவின் உயிருக்கு அமெரிக்காவில் ஆபத்து எதுவும் இல்லை என்றும் இங்கிலாந்து நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்துள்ளது.

இதையடுத்து இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் அசாஞ்சேவை அமெரிக்கா வசம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த முடிவு உலகெங்கும் விவாதங்களை எழுப்பியுள்ளது.