உதடுகளை அழகுப்படுத்தும் தொழிலில் இறங்கியுள்ள நயன்தாரா!

0
Follow on Google News

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றிகளைக் குவித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக் சில வருடங்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரின் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகின்றன.

இது மட்டுமில்லாமல் தனது காதலருடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். சினிமா தவிர இப்போது வேறு சில தொழில்களிலும் அவர் முதலீடுகள் செய்து வருகிறார். ஏற்கனவே சாய் வாலா என்ற சங்கிலித் தொடர் தேநீரகத்தில் முதலீடு செய்துள்ள அவர், இப்போது உதடு அழகு நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

மருத்துவர் ரெனிடா விஜயன் என்பவருடன் இணைந்து ஆரம்பித்துள்ள இந்த தொழிலில் லிப்ஸ்டிக்குகள் மற்றும் உதட்டு அழகு பொருட்கள் விற்பனை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.