பிரதமருக்கு எதிராக சு.வெங்கடேசன் ஆர்ப்பாட்டம்…! அதே இடத்தில் அதே நேரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்.! பேராசிரியர் அதிரடியால் பரபரப்பு..

0

வரும் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி மதுரை வருதையொட்டி, ஜனவரி 7ம் தேதி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாவட்ட எம்பிகளை ஒன்றிணைத்து பிரதமர் மோடிக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற இருப்பதாக கூறபடுகிறது.

அதற்கான ஆர்ப்பாட்டம் மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் நடக்க இருக்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை சு.வெங்கடேசன் எம்பி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சார்பில் அதிரடி அறிவிப்பை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சு.வெங்கடேசன் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு கடும் கண்டனதை தெரிவித்த பேராசிரியர்.மேலும் அவர் தெரிவித்ததாவது, திமுக எதிர் கட்சியாக இருந்த போது தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக GoBackModi என எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தற்போது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் திமுக மறுபடியும் செய்கிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. திமுகவின் ஊதுகுழலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறதோ என்கிற ஐயம் ஏற்படுகிறது.

கொரோனா நேரத்தில் மக்களுக்கு முன்னோடியாக தென்மாவட்ட எம்பிக்கள் மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும். இப்படி தொண்டு செய்ய வேண்டிய நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது ஜனநாயகத்தின் உச்சகட்ட அராஜகம். இதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. தமிழகத்துக்கு தேவையான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெறுவதற்கு தமிழக மக்கள் வாக்களித்து தென்மாவட்டத்தில் இருந்து எம்பிகளாக தேர்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினால்,

அங்கே டெல்லியில் ஒரு அணியையும் கழட்டாமல் இங்கே செயற்கையாக பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு பிம்பத்தை உருவாக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியல் அராஜகம் என தெரிவித்த பேராசிரியர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்தும் அதே இடத்தில் அதே நேரத்தில் பாஜக சார்பில் ஆயிரக்கனக்கான தொண்டர்களுடன் சு.வெங்கடேசன் எம்பி தலைமையிலான ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அதிரடியாக தெரிவித்த பேராசிரியர்.

மேலும் எனது தலைமையிலான ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கும் பட்சத்தில். அனுமதியின்றி எங்கள் ஆர்ப்பாட்டம், கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் அவர் நடந்த இருக்கும ஆர்பாட்டத்தின், அதே இடத்தில் அதே நேரத்தில் பாஜக சார்பில் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.