வெற்றி பெறுவாரா TTV தினகரன்… தேனி பாராளுமன்ற தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு.? கள நிலவரம் இதோ…

0
Follow on Google News

கம்பம் பெரியகுளம் போடிநாயக்கனூர் உசிலம்பட்டி சமயநல்லூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய தேனீ பாராளுமன்ற தேர்தல் தொகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், தேனி தொகுதியில் மட்டும் அதிமுகவின் வேட்பாளராக களம் இறங்கிய ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் இம்முறை மீண்டும் ரவீந்திரநாத் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக உடன் கூட்டணி அமைத்து தேனி பாராளுமன்ற தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் 1999 ஆம் ஆண்டு தேனி பாராளுமன்ற தொகுதி, அப்போது பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியாக இருந்த போது, அதிமுக சார்பில் போட்டியிட்டு மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

எம்பி ஆக வெற்றி பெற்று சுமார் ஐந்து வருடங்கள் தேனி பாராளுமன்ற தொகுதியில் பல நல திட்டங்களை செய்த டிடிவி தினகரன் அந்த தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சமானவராக இருந்து வருகிறார். மேலும் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆமமுக சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் சுமார் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2019 தேர்தலில் TTV உடன் இருந்த தங்க தமிழ்செல்வன் அவரை விட்டு விலகி அவரையே எதிர்த்து போட்டியிடுவதால், TTV வாக்கு சதவிகிதம் குறையுமா என்கிற கேள்விக்கு, TTV தினகரனை விட்டு தங்க தமிழ்செல்வன் பிரிந்த பின்பு நடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் TTV தினகரன் கட்சி தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது.

அந்த வகையில் தங்க தமிழ் செல்வனுக்கும் சொல்லும்படி தனிப்பட்ட வாக்கு வங்கி ஏதும் இல்லை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வாக்குகள் தான் அவருக்கும் ஓட்டாக விழும் என்கிறது கருத்து கணிப்புகள். அதே நேரத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி என்பது டிடிவி தினகரனுக்கு என்று ஒரு தனி வாக்கு வங்கி உள்ள தொகுதியாகவே இருந்து வருகிறது. மேலும் தற்பொழுது TTV உடன் கைகோர்த்துள்ள பெரிய குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வதிற்கு இருக்கும் செல்வாக்கு.

மேலும் தற்பொழுது தேனி பாராளுமன்றத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஓபிஎஸ் ஆதரவாளரான ஐயப்பன் இருந்து வருவது டிடிவி தினகரனின் செல்வாக்கு மேலும் கூடுதல் பலமாக இருக்கிறது மேலும் பிரதமர் மோடிக்கு தற்பொழுது மக்கள் மத்தியில் உள்ள எழுச்சி, அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஒட்டு போட்டால் யார் பிரதமர் என்கிற மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம், குறிப்பாக பிரதமர் மோடியை விரும்ப கூடிய மக்கள் TTV தினகரனுக்கு வாக்களிப்பார்கள்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமிக்கு மக்கள் மத்தியில் சொல்லும்படி செல்வாக்கு இல்லை. மேலும் தென் மாவட்டங்களில் குறிப்பாக தேனி பாராளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக என்கின்ற கட்சியே அட்ரஸ் இல்லாமல் சென்று விட்டதால், தற்பொழுது தேனி பாராளுமன்ற தொகுதி டிடிவி தினகரனுக்கும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையிலான நேரடி போட்டியாகவே இருந்து வருகிறது.

ஓ பன்னீர்செல்வத்துக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் டிடிவி தினகரனுக்கு உள்ள செல்வாக்கு, மேலும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடிக்கு உள்ள செல்வாக்கு, மற்றும் பாஜகவின் கணிசமான வாக்கு வங்கிகள் என பல்வேறு விஷயங்கள் டிடிவி தினகரனுக்கு வெற்றிக்கு சாதகமாக இருப்பதால், TTV தினகரனின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது என்கிறது கள நிலவரம்.