ஐபிஎல் 17-வது சீசன் போட்டிகள் கடந்த 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் பற்றி ஒரு தகவல் ஒன்று பரவி வருகிறது. இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முஸ்தஃபீசுர் ரஹ்மான் ஒன்பது ஓவர்களை வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி 39 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து பாதியில் விலகினார்.
இதனால் முஸ்தஃபிசுர் ரஹ்மான், சி எஸ் கே அணியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் முதல் போட்டியில் கலந்து மாஸ் காட்டினார். இந்நிலையில் இவரைப்பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த மொயீன் அலியை, 7 கோடி இந்திய ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அணியும் ஜெர்சியில் Myntra, ASTRA Pipes, SNJ 10000 ஆகிய விளம்பர லோகோ இடம் பிடித்துள்ளன. இதில், SNJ 10000 என்பது மதுபான நிறுவனத்தோடு தொடர்புடைய விளம்பர பெயராகும். இஸ்லாமிய மார்க்கத்திலும், மது ஒழிப்பிலும் அதிக ஈடுபாடு கொண்ட மொயீன் அலி SNJ 10000 லோகோ இல்லாத ஜெர்சியை தர வேண்டும் என்று சென்னை அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை சென்னை அணி நிர்வாகம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. சூன் 18 1987 இல் பிர்மின்ஹாமில் பிறந்த மொயீன் அலி, காஷ்மீரி வம்சாவளியினைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அசாத் காஸ்மீரில் இருந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மொயின் அலி போன்றே முஸ்தஃபீசுர் ரஹ்மானும், SNJ 10000 லோகோ இல்லாத ஜெர்சியை தர வேண்டும் என்று சென்னை அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து மது விளம்பர கம்பெனி லோகோ இல்லாத ஜெர்சியை அணிந்து விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது பதிராணா காயமடைந்திருக்கும் நிலையில் முஸ்தஃபீசூர் ரஹ்மான்தான் ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவானார். இந்த நிலையில் முஸ்தஃபீசுர் ரஹ்மானும் மது விளம்பரத்திற்கு நோ என்று கூறி இருப்பது சிஎஸ்கேவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே மொயின் அலி விஷயத்தில் சிஎஸ்கே ஓகே சொன்ன நிலையில் இரண்டாவதாக முஸ்தஃபீசூர் ரஹ்மானும் நோ சொல்லியிருப்பது அந்த அணிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது. இதை சமாளிக்க இரண்டு வீரர்களுக்கும் வழங்கப்படும் ஊதியம் குறைக்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஐபிஎல் அணிகளுக்கு பொதுவாக டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரங்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.
இதற்காகத்தான் ஒவ்வொரு அணியின் ஜெர்சியிலும் பல நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அணிக்கு கிடைக்கும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து வீரர் மொயின் அலி மற்றும் வங்கதேச வீரர் முஸ்தஃபீசூர் ரஹ்மான் ஆகியோர் மது விளம்பரங்களுக்கு நோ சொன்ன விஷயம் சிஎஸ்கேவுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.
இருந்தாலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் மது விளம்பரம் லோகோ இடம்பெற்ற ஜெர்ஸியை அணிய மாட்டோம் என மொயின் அலி மற்றும் வங்கதேச வீரர் முஸ்தஃபீசூர் ரஹ்மான் இருவரும் உறுதியாக இருப்பது பலருடைய பாராட்டை பெற்றுள்ளது. நமது நாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பணம் கிடைக்கிறது என்பதற்காக பான் பராக் போன்ற விளம்பரங்களில் நடித்து வரும் நிலையில், இவ்விரு கிரிக்கெட் வீரர்களும் மது விளம்பரத்திற்கு நோ என்று கூறி இருப்பது பணத்தாசையில் பான்பராக், மது, போன்ற விளமபரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு சம்மட்டி அடியாக அமைத்துள்ளது.