ஆணவ திமிரில் ஆடும் ஹர்திக் பாண்டியா… நார் நாராக கிழித்து தொங்க விட்ட முகமது சமி…

0
Follow on Google News

2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக களம் இறக்கப்பட்ட ஹார்திக் பாண்டியா, நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியை விட்டு விலகி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்கியுள்ளார். இதனால் குஜராத் அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி ரோஹித் சர்மாவின் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் நடவடிக்கைகள் பற்றியும் கேப்டன்சி பற்றியும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.

ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பற்றிய விவாத போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல பந்துவீச்சாளர் முகமது சமி தனது பங்கிற்கு ஹர்திக் பாண்டியா குறித்து கொளுத்திப் போட்டிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக வலம் வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அதே அணிக்காக முகமது சமியும் களம் இறக்கப்பட்டிருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா முதல்முறையாக கேப்டன்சி செய்ததால், “தான் தான் கேப்டன்” என்ற அகம்பாவம் அவருக்குள் இருந்துள்ளது. அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணியில் இருந்த தன்னைவிட மூத்த கிரிக்கெட் வீரர் ஆன முகமது சமியை களத்திலேயே திட்டி இருக்கிறார்.

தனது திறமையான பந்து வீச்சினால் அதிக விக்கெட்டுகளை மலமலவென குவிக்கும் திறமையான கிரிக்கெட் வீரர் முகமது சமி. இவர் இதற்கு முன்னதாக தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோரின் கேப்டன்ஷியில் விளையாடியிருக்கிறார். இவர்கள் யாரும் சமியை திட்டியது கிடையாது. ஆனால் தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த ஹர்திக் பாண்டியா, குஜராத் அணிக்கு தலைமை தாங்கிய போது களத்திலேயே தன்னைத் திட்டியதை சமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும் அந்தப் போட்டியின் முடிவில் இனி இது போல் நடக்கக்கூடாது என்று குஜராத் ஐட்டம்ஸ் நிர்வாகத்திடம் சமி கரராக கூறி இருக்கிறார். இதையடுத்து குஜராத் தனி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை அழைத்து அணியில் உள்ள சக கிரிக்கெட் வீரர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது. அதன் பின்னர் இது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் முகமது சமிக்கு ஹர்திக் பாண்டியா மீதான பழைய மணக்கசப்பு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அதாவது ஹர்திக் குஜராத் அணியை விட்டு விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்த போது, “பாண்டியா அணியை விட்டு விலகிச் செல்வதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை” என்று சமி கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து பேசுகையில் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்து இருந்தார் முகமது சமி.

அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் ஐந்தாவது வரிசையில் இறங்காமல் ஏழாவது வரிசையில் இறங்கினார். இதுகுறித்து சமி பேசுகையில், “நான்கு அல்லது ஐந்தாம் வரிசையில் இறங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஏழாவது வரிசையில் இறங்கினால் உங்களை பின்வரிசை வீரராகவே கருத முடியும்.ஹர்திக் பாண்டியா மட்டும் அந்தப் போட்டியில் முன் வரிசையில் களம் இறங்கி இருந்தால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றிருக்காது” என்று ஹர்த்திக்கை தாக்கி பேசியிருந்தார்.

ஒரு பக்கம் குஜராத் அணியிலிருந்து விலகியதற்காக அந்த மாநில ரசிகர்கள் ஹர்த்திக்கை தாக்கி வருகின்றனர். மற்றொரு பக்கம் ரோகித் சர்மா கேப்டன்சியை பறித்து ஹர்திக் கேப்டனாக மாறியதால் ரோஹித் சர்மா ரசிகர்களும் கடுமையாக வறுத்து எடுத்து வருகின்றனர். இப்படி சோசியல் மீடியா முழுவதும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் ஹர்திக், சக கிரிக்கெட் வீரரான முகமது சமியாளும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு போதாத காலம் போல …