போதிய பண வசதி இல்லை.! கல்லூரியில் நடந்த குழப்பம், புதைவட கேபிள் பதிக்கும் மாணவி சத்யா தேவி.!

0
Follow on Google News

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா மங்களூர் ஒன்றியத்தில் வசித்து வருகிறார் ராமசாமி. இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவியும், துரைராஜ் என்ற மகனும், சத்யா தேவி என்ற மகனும் இருக்கின்றனர், ராமசாமியும் மனைவி சின்னப்பொண்ணும் புதைவட கேபிள் பதிக்கும் பணியில் வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் கூலி வேலை பார்த்து வந்தாள் தான் வருமானம்.

அப்படி இருக்கையில் தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்ட உள்ளார். இவரது மகனான துரைராஜை கஷ்டப்பட்டு டிப்ளமோ வரை படிக்க வைத்து விட்டனர். ஆனால் மகள் சத்யா தேவியை படிக்க வைக்க போதுமான வருமானம் இல்லாத காரணத்தினால் அவரை அரசு கலைக்கல்லூரியில் சேர்த்தனர். ஆனால் சத்தியாவின் ஆசையோ அக்ரி சார்ந்த படிப்பை படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால் இவரை சேர்த்து அரசு கலைக்கல்லூரியில் அங்கிரி படிப்பு இல்லாத காரணத்தினால் மைக்ரோ பயாலஜியை கல்லூரி நிர்வாகம் வழங்கியது. தனது கனவை மாற்றிக்கொண்டு மைக்ரோபயாலஜி படிக்க முன்வந்த சத்யாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டது. முதலில் மைக்ரோபயாலஜி சீட் கொடுத்த கல்லூரி நிர்வாகம், பிறகு சத்யாவுக்கு தவறாக அட்மிசன் போட்டு விட்டதாகவும் அதனால் பயோ கெமிஸ்ட்ரி படிக்க கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது.

கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து கெமிஸ்ட்ரி படிக்க வற்புறுத்தியதால் அந்தப் படிப்பை படிக்க முடிவு செய்தார்.அதற்காக 31,000 வரை பணம் செலுத்தி படித்து வந்த மாணவி சத்யா தேவி முதல் செமஸ்டர் எழுதியுள்ளார், ஆனால் அணைத்து மாணவர்களுக்கும் செமஸ்டர் ரிசல்ட் வெளியானது, சத்யாவுக்கு மட்டும் வெளியாகவில்லை, இது குறித்து கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட சத்யா தேவிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

மாணவி 12வகுப்பு பாடத்தில் ஒரு குறிப்பிட்ட பாடம் இல்லாததால் அவரை கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது விருப்பட்டப் படிப்பை படிக்க முடியாமல் கிடைத்த படிப்பையும் தொடர முடியாமல் தாய் தந்தையுடன் இணைந்து புதைவட கேபிள் பதிக்கும் பணியில் வேலை பார்த்து வருகிறார். வேறு கல்லூரியில் சேர போதுமான வசதியில்லாததால் தன் கனவுகளை குழி தோண்டி புதைத்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார்.