தேர்தல் முடியும் வரை மைக் முன்னாடி உன்னை பார்த்தேன் துளைத்துவிடுவேன்.! துரைமுருகன் செம்ம டோஸ்.. வீட்டில் முடங்கிய திமுக பிரசன்னா.!

0
Follow on Google News

திமுக செய்தி தொடர்பாளராக இருந்து வருகின்றவர் பிரசன்னா, இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளத்தில் பிரபலம் ஆனவர், தனனை பகுத்தறிவாதி என வெளிப்படுத்தி கொன்டு திமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பேசும் பிரசன்னா ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படும்படி பேசுவது, திமுக பொது கூட்டத்தில் அங்கரிக்கமாக பேசுவது, ஆபாசமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை இவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த திமுக, நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மதங்களுக்கு முன்பு இவரின் ஆபாச மற்றும் அநாகரிக பேச்சுக்கள் தொடர்ந்தால் திமுகவின் வாக்குகள் எதிரணிக்கு போகும் என்பதை உணர்ந்து பிரசன்னாவை ஓரம் கட்ட தொடங்கியது திமுக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த பிரசன்னா நேர்காணலில் பங்கு பெற அறிவாலயம் வந்த போது உள்ளே விடாமல் வாசலிலே திமுக மூத்த தலைவர் ஒருவர் விரட்டியதாக அப்போது செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் சீட் கேட்டு திமுக முக்கிய தலைவர்களை காக்கா பிடித்த பிரசன்னாவுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது, இருந்தும் திமுக பேச்சாளராக இருக்கும் பிரசன்னா தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வேட்பளரிடம் நிதி பெற்று ஒரு பெரும் தொகையை இந்த தேர்தலில் சம்பாரித்து விடலாம் என எதிர்பார்த்து இருந்தார் பிரசன்னா, ஆனால் இவர் பிரச்சாரம் செய்தால் அது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்துவிடும் என திமுக தலைமை அந்த வாய்ப்பையும் இவருக்கு வழங்கவில்லை.

இதனை தொடர்ந்து சில முக்கிய திமுக தலைவர்களை காக்கா பிடித்து துறைமுகம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் பிரசன்னா, இதன் பின்பு ஓன்று, இரண்டு நாட்கள் திமுக வேட்பாளர் சேகர் பாபு உடன் துறைமுகம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரசன்னா, ஆனால் கடந்த காலத்தில் பிரசன்னா, ஒரு குறிப்பிட்ட மத கடவுள்களை இழிவாக பேசியது, மற்றும் அவரது அநாகரிகமான பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனால் துறைமுகம் தொகுதியில் வேட்பாளர் உடன் பிரசன்னா பரப்புரையில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது, இந்த தகவல் திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்ல உடனே திமுக பொது செயலாளர் துரைமுருகனை இந்த விவகாரத்தை அணுக செய்துள்ளது தலைமை, உடனே பிரசன்னாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துரைமுருகன், தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரசன்னா தலைமை என்னை துறைமுகம் தொகுதியின் தேர்தல் பெறுப்பாளராக நியமித்துள்ளது, இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றுவிட்டால் எனக்கு நற்பெயர் ஏற்பட்டு விடும் என்பதற்காக சிலர் உங்களிடம் என்னை பற்றி தவறாக கூறியிருக்கலாம் என தெரிவிக்க, உடனே ஆவேசம் அடைந்த துரைமுருகன் தேர்தல் முடியும் வரை உன்னை நான் மைக் முன்னாடி பார்த்தேன் துளைச்சு புடுவேன் என கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது, இதனால் வீட்டில் முடங்கிய பிரசன்னாவை அவ்வப்போது விடுதலை சிறுத்தை கட்சி பிரச்சாரத்தில் மட்டும் பார்க்க முடிகிறது என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.