17வயது சிறுமியை ஏமாற்றி ஐந்தாவதாக திருமண செய்த சவுகத் அலி போக்சோ சட்டத்தில் கைது.. கும்பகோணத்தில் பரபரப்பு..

0
Follow on Google News

கும்பகோணத்தை சேர்ந்த 17வயது சிறுமியை ஏமாற்றி ஐந்தாவதாக திருமண செய்து கொள்ள இருந்த அந்த மர்ம நபர் கைது. கும்பகோணத்தை 17வயதுடைய சிறுமி ஒருவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சவுத் அலி என்ற நபர் நட்பாக பழகி வந்துள்ளார.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் விரைவில் காதலர்கள் ஆனார்கள். இந்த நிலையில் சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். இந்த சிறுமியை அந்த மர்ம நபர் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் மகள் காணமால் போனது குறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோர்கள் கொடுத்த புகாரை அடுத்து நாச்சியார் கோவில் காவல் நிலைய எஸ்ஐ காமராஜ் அவருடைய தலைமையில் காணமால் போன சிறுமியை தனிப்படை அமைத்து தீவிரமாக காதல் ஜோடிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த காதல் ஜோடிகள் கேரளாவில், கோட்டயம் பகுதியில் சவுகத் அலியி அந்த சிறுமியிடம் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து எஸ்ஐ காமராஜர் தலைமையில் அமைத்த தனிப்படையினர் அங்கு சென்று இந்த காதல் ஜோடிகளை அலேக்கா தூக்கி கொண்டு கும்ப கோணத்திற்கு கொண்டு வத்தனர். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், சிறுமியை திருமணம் செய்த சவுகத்அலி இதற்கு முன் நான்கு பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.

தற்போது ஐந்தாவதாக சிறுமியை திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த மர்ம நபரான சவுத் அலியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சவுத் அலியிடம் மேலும் வேறு எதுவும் பெண்களை ஏமாற்றி உள்ளரா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!