பெண்களே உஷார்.!கொடைக்கானலில் பாத்ரூம் சென்ற பெண்ணை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த ஹோட்டல் ஊழியர்.!

0
Follow on Google News

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நம்ஜித் ராஜ் என்ற நபர் வேலை பார்த்து வந்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது வந்த தனியார் ஹோட்டலில் உணவருந்த குடும்பத்துடன் வந்திருந்தனர். அனைவரும் உணவு அழிந்து கொண்டிருக்கும் போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பாத் ரூம் சென்றிருந்தார்.

அப்போது பாத் ரூமில் உள்ள ஜன்னல் வழியாக இவரை யாரோ பார்ப்பது போன்று தோன்றியது. உடனடியாக சுதாரித்துக் கொண்டு யார் என்று வெளியில் வந்து கையும் களவுமாக பிடித்து விட்டார். யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்? ஜன்னல் வழியாக எதற்கு என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று அந்த பெண் கேட்க அந்த இளைஞன் உடனடியாக அந்தப் பெண்ணிடம் சாரி என்று சொல்லிவிட்டு நகரத் தொடங்கினான்.

இந்த சம்பவத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் குடும்பத்தாரிடம் சொல்ல அவர்களோ, அவனை பிடித்து வெளுத்து கட்டி விட்டனர். அந்த இளைஞன் கெஞ்சத் தொடங்கினான், ஆனால் குடும்பத்தினர்கள் விடுவதாக இல்லை. போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் அந்த இடத்திற்கு வரும் வரை துவைத்து எடுத்தனர்.

போலீசார் விசாரித்த பிறகுதான் இவன் இந்த ஹோட்டலில் வேலை செய்யும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவன். என்னதான் அவன் காலை பிடித்து மன்னிப்பு கேட்டாலும் அந்தப் பெண்மணியும் மன்னிக்கும் எண்ணம் இல்லை காரணம் இவன் செய்த காரியம் தான். அந்தப் பெண்ணும் தைரியமாக முன்வந்து இவர் மீது புகார் கொடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இவனை சிறையில் அடைத்தனர். இளைஞர்கள் கட்டுப்படுத்த முடியாத ஆசைகளால் இது போன்று தங்கள் வாழ்க்கையை அவர்களே சீரழித்து கொள்கிறார்கள்.