பிரசன்னா அரசியலுக்கு முடிவு கட்டிய ராஜிவ் காந்தி.! குட்டிக்கரணம் போட்டு கதறும் பிரசன்னா… கண்டு கொள்ளாத திமுகவினர்..

0
Follow on Google News

திமுக செய்தி தொடர்பாளராக இருந்து வருகின்றவர் தமிழன் பிரசன்னா. திமுக எதிர்கட்சியாக இருந்த போது எதிர்மறை அரசியல் பேச்சின் காரணமாக. அதனால் தனக்கு எதிராக வந்த கடும் விமர்சனம் காரணமாக பிரபலம் அடைந்தவர் பிரசன்னா. தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் இந்து மதத்துக்கு எதிராக பிரசன்னா பேசியது பெரும் சர்ச்சையானது. ஆனால் ஒரு தரப்பினர் பிரசன்னாவின் இந்த பேச்சுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

தொடர்ந்து பிரசன்னாவின் அநாகரிகமான பேச்சுக்களால் மக்கள் மத்தியில் கடும் எதிப்பு வர. மேலும் பிரசன்னாவின் அதிக பிசங்கி தனத்தினால் திமுக முக்கிய தலைவர்கள் பிரசன்னா மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பிரசன்னாவை திமுக தலைமை புறக்கணிக்க தொடங்கியது மட்டுமில்லாமல் நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரசன்னா பேசினால் அது திமுகவுக்கு பின்னடைவு என அவரை பிரச்சாரத்துக்கு கூட சரி வர பயன்படுத்தவில்லை என கூறபடுகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் ராஜிவ் காந்தி இணைந்த பின்பு பிரசன்னாவுக்கு கிடைக்க வேண்டிய மேடை வாய்ப்புகள் ராஜீவ் காந்திக்கு கிடைக்க தொடங்கியது. மேலும் பிரசன்னா மீது அதிருப்தியில் இருந்து வந்த திமுக முக்கிய தலைவர்கள் ராஜீவ் காந்திக்கு முக்கியத்துவம் அளித்து பிரசன்னாவை ஓரம் கட்ட தொடங்கினர். மேலும் சமூக வலைதளத்தில் திமுக உடன்பிறப்புகள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் ராஜிவ் காந்திக்கு ஆதரவு அளிக்க தொடங்கினர்.

இப்படி பள்ளி பருவத்தில் இருந்து திமுகவில் இருந்து வரும் தன்னை ஓரம் கட்டிவிட்டு நேற்று வரை திமுகவை விமர்சனம் செய்துவிட்டு தற்போது கட்சியில் இணைந்த ராஜிவ் காந்தி ஊடகத்தில் முக்கியத்துவம் பெற்று வந்தது பிரசன்னாவுக்கு கடும் அதிருப்தியை தந்து வந்த நிலையில்,திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் அவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டது மேலும் பிரசன்னாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மனைவி இறந்த பின்பு சில காலம் ஓய்வில் இருந்த பிரசன்னா மீண்டும் ஊடக அரசியலில் விறுவிறுப்பாக செயல்பட்டாலும். திமுகவினர் கூட பெரும்பாலும் அவரை கண்டுகொள்ள வில்லை. இதனை தொடர்ந்து பிரசன்னா ஓய்வில் இருந்த சில காலம் ஊடகத்தில் ராஜிவ் காந்தியின் செயல்பாடு விறுப்பாக இருந்ததை தொடர்ந்து பிரசன்னாவை யாரும் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில் தற்போது பல குட்டிக்கரணம் போட்டு பழைய நிலைமைக்கு முயற்சிக்கு பிரசன்னா யுக்திகள் ஏதும் கை கொடுக்கவில்லை.

இதனால் ஊடக அரசியலில் இருந்து பிரசன்னா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில்,இதற்கு காரணம் ராஜிவ் காந்தி திமுகவில் இணைந்த பின்பு தான் என கூறப்படும் நிலையில். பிரசன்னாவின் ஊடக அரசியலில் முடிவுக்கு கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.