மும்பை டெஸ்ட்… இரண்டாம் நாளில் நடந்த ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும்

0
Follow on Google News

மும்பையில் நடந்து வரும் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதையடுத்து நேற்று முதல்நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களோடு முடித்தது.

அதையடுத்து இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் அனைத்து விக்கெட்களையும் நியுசி சுழல்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் மட்டுமே வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்திய மூன்றாவது வீரரானார். இதையடுத்து களமிறங்கிய நியுசி அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது.

சீட்டுக்கட்டு கோபுரம் தடதடவென விக்கெட்கள் வீழ்ந்து 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 263 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்து 332 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.