அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு… பயிற்சியாளராகும் இந்திய வீரர்!

0

இந்திய மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளாராம். இந்திய அணியில் ஒரு காலத்தில் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். ஆனால் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆனாலும் பிடிவாதமாக இன்னமும் ஓய்வு அறிவிக்காமல் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அவர் ஒரு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது 41 வயதாகும் ஹர்பஜன் சிங் கடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.