பட்ஜெட் வருமா.? வராத.? பெண்கள் புகைப்படத்துக்கு லைக் போட்டு விளையாடுவதில் பிசியாக இருக்கும் நிதியமைச்சர் PTR தியாகராஜன்.!

0
Follow on Google News

திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் மாதம் தோறும் வழங்கப்படும். தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை ரூபாய் ஐந்து குறைக்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்று ஆட்சியை அமைந்தது திமுக. முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும். முதல் கையெழுத்து குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என திமுக தேர்தல் வாக்குறுதிகளில் எது முதல்வரின் முதல் கையெழுத்து என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை சுட்டி காட்டி, எப்போது இதை அமல் படுத்துவார்கள் என பத்திரிகையாளர் ஒருவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி கேட்க, தேதி போட்டார்களா.? எப்போது என்று தேதி போட்டாங்களா.? என நிதியமைச்சர் பதிலளித்த போது தான் தமிழக மக்கள் தாங்கள் ஏமாற்ற பட்டுள்ளோம் என்பதை புரிந்து கொண்டனர்.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் முடிய உள்ள நிலையில், விரைவில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்க பட்டு வரும் நிலையில். பட்ஜெட் குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும், இந்த பட்ஜெட் கக்கியத்தமில்லா பட்ஜெட் என நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் கொடுக்கும் பில்டப் தமிழக மக்களை மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் தற்போது நிதிநிலையின் படி வாட் வரியை குறைக்க முடியாது என்றும், மாநிலத்தின் நிதிநிலை சீரானதும் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என கூறினார். இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என உணர்ந்த தமிழக மக்கள் சரி மாதம் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்று குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரமாவது கிடைக்குமா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்று எந்த தகவலும் இல்லை. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு திமுக அரசுக்கு எதிராக உருவாகும் என்பதை அறிந்து பட்ஜெட் தாக்கல் தாமதம் ஆவதாக கூறபடுகிறது. இந்நிலையில் தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டிவீட்டரில் பெண்கள் புகைப்படங்களுக்கு லைக் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.