என்ன பேச வேண்டுமோ? அதை விட்டுவிட்டு கிராம சபைக் கூட்டங்களில் பேசுவதை ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பேசுவதா.?

0
Follow on Google News

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர் சர்ச்சையில் சிக்கி வருவது குறித்து புதிய தமிழக கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்ததத்தவது, தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் கடந்த 07 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது முதல், தினம் தினம் சர்ச்சைகளை உருவாக்குகிறார். தமிழகத்தின் வரலாற்றில் நிதித்துறை இதுவரை மாநில முதலமைச்சரிடத்திலோ அல்லது அமைச்சரவையில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வகித்தவர்களிடத்திலோ தான் இருந்திருக்கிறது.

இன்றைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதற்கு முன்பு கட்சியிலோ, ஆட்சியிலோ முக்கிய பதவிகள் எதுவும் வகித்த மூத்த நிர்வாகியும் அல்ல; போராட்டங்கள் எதிலும் கலந்து கொண்டு அனுபவப்பட்டவரும் அல்ல. ஒரே ஒரு முறை மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். வெகு அண்மை காலமாக மட்டுமே கட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். எனவே தான். அமைச்சரவையிலும் கடைசியாகவே வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். எனினும் இன்று ஏறக்குறைய 8-கோடி தமிழக மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பொறுப்பேற்று ஒரு மாத காலம் ஆகப்போகிறது. இவர் முறையாக செயல்பட்டிருந்தால் இந்நேரம் பெட்ரோல், டீசலுக்கான ஜி.எஸ்.டி வரியை நீக்கி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நிம்மதியை உண்டாக்கியிருக்கலாம். ஆனால் அதுபோன்று நிதித்துறை அமைச்சர் செய்ய வேண்டிய எவ்வித ஆக்க பூர்வ நடவடிக்கையும் அவர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக மத்திய அரசு உட்படப் பலருடனும் மோதல் போக்கை மட்டுமே கையாண்டு வருகிறார்.

அதேபோல நேற்றைய முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி காணொளி கூட்டத்தில் என்ன பேச வேண்டுமோ? அதை விட்டுவிட்டு மத்திய அரசை சிறுமைப் படுத்துகிறீர்கள்? இன்னொரு மாநிலத்தைக் குறைத்து பேசுகிறீர்கள்? ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில சுயாட்சி பற்றி முழங்குகிறீர்கள்? கோவா மாநிலம் ஒப்பீட்டு அளவில் சிறியது என்றாலும், மாநில அந்தஸ்து பெற்றது. ஜிஎஸ்டி காணொளி கூட்டத்தில் கோவா மாநில மக்களின் மனம் புண்படும்படி, அம்மாநிலத்தை குறைத்துப் பேசியதால் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றியிருக்கிறது

மிக முக்கியமான ஜிஎஸ்டி கூட்டங்களையே அரசியல் விவாத மேடைகள் ஆக்குகிறீர்கள். தேர்தல் காலங்களில் உங்கள் கட்சி நடத்திய கிராம சபைக் கூட்டங்களில் பேசியதை போல, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி கூட்டத்தளத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீணடிக்கிறீர்கள். புளித்துப்போன மாநில சுயாட்சி பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள். அறிவுஜீவி என்ற அதிமேதாவி தன அரிப்பை மட்டுமே எல்லா இடங்களில் சொரிந்து காட்டுவதிலேயே நீங்கள் குறியாக இருக்கிறீர்கள். என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.