டாகடர் சரவணனை மிஸ் பண்ண மாட்டோம்… மதுரை வடக்கு தொகுதி மக்கள் முடிவு … மதுரை வடக்கு தொகுதி கள நிலவரம்

0
Follow on Google News

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும், மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, அப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதும் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இந்நிலையில் , ஒருபக்கம் வடக்கு தொகுதி எனக்கு உனக்கு என காங்கிரஸ் – திமுக இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டி கொண்டிருக்க, மறுப்பக்கம் வடக்கு தொகுதியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து, தேர்தல் களத்தை தனக்கும் சாதகமாக முழுமையாக மாற்றி விட்டார் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணன்.

கடந்த 2021 தேர்தலில் இதே வடக்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 50 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி வைப்ப்பை நுனியிலையில் நழுவ விட்ட மருத்துவர் சரவணனை மிஸ் செய்து விட்டோமே என்கிற ஏக்கம் அந்த தொகுதி மக்களுக்கு உண்டு, கடந்த 5 வருட திமுக ஆட்சியில் மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, குறிப்பாக மதுரை மாநகராட்சியி மோசமான செயல்பாடுகளால், மதுரை வடக்கு தொகுதியில் குண்டும் குழியுமான சாலை, மற்றும் சுகாதாரமற்ற சூழல், இவை அனைத்தும் திமுகவை துடைத்து எறியவேண்டும் என்கிற மனநிலையில் மதுரை வடக்கு தொகுதி மக்கள் உள்ளனர்.

தொகுதிக்குள் எவ்வளவு பிரச்சனை உள்ள நிலையில், அந்த தொகுதி எம் எல் ஏ தளபதி தொகுதி பக்கமே வரவில்லை என்கிற கோபம் வடக்கு தொகுதி மக்களுக்கு உண்டு, இதெல்லாம் தற்பொழுது மதுரை வடக்கு தொகுதியில் கோ தளபதி மக்களிடம் வாக்கு கேட்டு கூட செல்ல முடியாத ஒரு சூழலை உருவாக்கி வைத்து இருக்கிறது. அதே நேரத்தில் அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட அதிமுக வேட்பாளரை மருத்துவர் சரவணனுக்கு வடக்கு தொகுதி மக்கள் மத்தியிலான செல்வாக்கு இந்த தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்பதையும் கள நிலவரம் உணர்த்துகிறது.

மதுரை வடக்கு தொகுதியில் நரிமேடு பகுதியில் இயங்கி வரும் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு சொந்தமான சரவணா பல்நோக்கு மருத்துவமனை அந்த தொகுதி மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லும் வகையில் இதன் மூலம் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறார் மருத்துவர் சரவணன் , குறிப்பாக உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலம் இலவசமாக செயற்கை உடல் உறுப்புகள் பொருத்துவ தை சேவையாகவே செய்து வருகிறார் டாக்டர் சரவணன்.

மேலும் கடந்த கால அதிமுக ஆட்சியில் இயங்கி வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இழுத்து மூடப்பட்ட நிலையில், அதனால் பயனடைந்த ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்த நிலையி, மதுரை வடக்கு தொகுதியில் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார் மருத்துவர் சரவணன், இப்படி வடக்கு தொகுதி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வரும் டாக்டர் சரவணன் அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்,

கடந்த முறை டாக்டர் சரவணனை மிஸ் செய்தது போன்று இந்த முறை நாம் மிஸ் செய்து விடக்கூடாது என்பதில் பெரும்பாலான வடக்கு தொகுதி மக்கள் உறுதியாக இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இல்லாத போதே நம்ம தொகுதி மக்களுக்கு பல சேவைகளை செய்து வரும் டாக்டர் சரவணன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் நம் தொகுதிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்கிற மனநிலையில் வடக்கு தொகுதி மக்கள் பெரும்பலும் இருப்பதை பார்க்க முடிகிறது, அந்த வகையில் இந்த முறை மதுரை வடக்கு தொகுதில் டாக்டர் சரவணன் மிக எளிதாக வெற்றி பெறுவார் என்கிறது வடக்கு தொகுதி தேர்தல் கள நிலவரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here