பாமகவை காலி செய்ய ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.! எடப்பாடி பழனிசாமியின் அரசியல் ராஜதந்திரம்.!

0
Follow on Google News

வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடம் ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காவை வீழ்த்தியுள்ளார் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம் பெற பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் இறுதி வரை பேச்சு வார்த்தை நடத்தி வந்தார், ஆனால் திமுக உடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் TTV தினகரன் உடன் பாமக கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உருவானது, இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், வட மாவட்டத்தில் அமமுக + பாமக இனைந்து இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்புகள் அமையும், மேலும் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை உருவாகும், இது அடுத்து நடக்கும் 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டு, இரண்டாம் இடத்துக்கு அதிமுக மற்றும் பாமக + அமமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என உணர்ந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதனை தொடர்ந்து பாமகவை தன் வசப்படுத்த கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதி மற்றும் ஒரு ராஜசபா சீட் வழங்கி கூட்டணியில் இனைத்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டாம் இடத்தை உறுதி செய்து தற்போது நடைபெற்று முடித்த சட்டசபை தேர்தலில் முதல் இடத்துக்கு போட்டியிட்டுள்ளது. இந்நிலையில் கொங்கு மண்டலம் மற்றும் வடமாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் எடப்பாடி பழனிசாமி.

வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு வழங்கி சுமார் குறைந்தது 30 தொகுதிகளில் இருந்து 35 தொகுதிகள் வரை அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 23 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி ஆப் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி, குறைந்த தொகுதியில் போட்டியிடும் பாமக குறித்து கடும் விமர்சனம் எழுந்த நிலையில், இட ஒதுக்கீட்டுக்காக தொகுதிகளை தியாகம் செய்ததாக பாமக தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி பழனிசாமி எதிர்காலத்தில் வன்னியர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுப்பர் என்றும், மேலும் இதை காரணம் காட்டி பாமகவுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக 5.5 சதவிகிதம் வாக்குகள் வாங்கி இருந்த நிலையில் தற்போது 3.5 சதவிகிதம் வாக்குகளை மட்டும் பெற்று பெருமளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி அடுத்து வரும் தேர்தலில் பாமகவுக்கான தொகுதிகளை குறைக்க வழிவகுத்து ஒரே கல்லில் இரண்டு மங்காவை எடப்பாடி பழனிசாமி வீழ்த்தியுள்ளார் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.