பசும்பொன் தேவர் அவர்களுக்கு எதிராக திராவிடத்தின் திட்டமிட்ட சதி.! தேசத்தை நேசிக்க கூடிய ஓவொருவரும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய பேராசிரியரின் தேவர் ஜெயந்தி சிறப்பு பேட்டி..

0
Follow on Google News

பசும்பொன் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவை தொடர்ந்து, பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன் அளித்த சிறப்பு பேட்டியில் பசும்பொன் தேவர் அவர்கள் பற்றி தெரிவித்துள்ளதாவது. பசும்பொன் தேவர் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த தேசியவாதி, சுதந்திர விடுதலை வேள்வியின் போது தன்னை நேதாஜி அவர்களின் சித்தாந்தத்தில் இணைத்துக்கொண்டு தொடர்ந்து பணியாற்றியவர், நேதாஜி அவர்கள் மறைந்த பின்பு கூட அவர் கொள்கைகளையும், சத்தியங்களையும் சுமந்துகொண்டு தமிழகம் முழுக்க தூய அரசியல் வேள்வி செய்தவர் பசும்பொன் தேவர் அவர்கள், அவர் முழுக்க முழுக்க தேசியவாதி, ஆன்மீகவாதி.

ஆனால் தமிழகத்தில் எப்பொழுது திராவிட சித்தாந்தம் அரசியல் ரீதியாக தலையெடுக்க ஆரம்பித்ததோ, அப்போது இந்த தேசியவாதிகள் எல்லாம் ஒரு சாதிய வட்டத்துக்குள் அடக்கும் முயற்சியை மறைமுகமாக நடைபெற்றதை தமிழக மக்கள் பலரும் புரிந்து கொள்ளவில்லை, திராவிட சித்தாந்தம் பேசிய ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் எல்லாம் மக்கள் தலைவர்கள் போன்றும், தேசியத்திற்காக, சுதந்திரத்திற்காக, அரசியலுக்காக நேர்மையான பொது வாழ்க்கைக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த ஐயா பசும்பொன் தேவர், வ.உ.சிதம்பரனார் பிள்ளை, காமராஜர் போன்றவர்களை ஜாதிய தலைவர்களாக மாற்றப்பட்டதும், இந்த அறுபது ஆண்டுகால திராவிட இயக்கங்கள் சதி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், அதையும் தாண்டி ஐயா பசும்பொன் தேவர், வாஉசி போன்றவர்கள் மிகப்பெரிய தேசியவாதிகளாக அடையாளம் காட்டப்பட்டு மக்கள் மனதில் மறுபடியும் Icon ஆக திகழ தொடங்கியுள்ளார்கள், குறிப்பாக பசும்பொன் தேவர் அவர்கள் தமிழகத்தின் தேசிய Iconஆக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறார், அவரை இனிமேல் யாரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கும் மட்டும் சேர்ந்தவர் என ஒரு சாதி வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் பங்களிப்பும் பெரிதாக இருக்கின்றது.

எப்படி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும்,பாரதிய ஜனதா கட்சி அவரை சொந்தம் கொண்டாடி இந்த தேசத்தை இணைத்தவர் என்ற அளவில், இந்த உலகத்தில் பிரமாண்ட சிலையை அமைத்து, பட்டேல் எப்படி இந்தியாவின் ஐகானாக திகழ்கிறார், அதேபோல தமிழகத்தில் பசும்பொன் தேவர் அவர்கள் தேசியமும் தெய்வீகமும் பாடுபட்டு வாழ்ந்த திருமகனார் என்ற அடிப்படையில் ஒரு Icon ஆக திகழ்ந்து வருகிறார்.

இனிமேலும் அவர் திகழ்வார், குறிப்பாக தேசிய தலைவர்களை சாதிய வட்டத்துக்குள் மட்டுமில்லாமல் வெளியில் கொண்டுவந்து அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள், இந்த திராவிட சித்தாந்தகளுக்கு எதிரானவர்கள் என்று மக்களுக்கு புரியவைத்து, தமிழகத்தில் திராவிட சித்தாந்தங்கள் விரைவில் கரைக்க படும். ஒரு முறை அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் உங்களுக்குப் பிடித்த தென்னிந்திய அரசியல் தலைவர் யார் என கேள்வி கேட்டபோது, ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் பசும்பொன் தேவர் அவர்கள் தான் எனக்கு பிடித்த தலைவர் என வாஜ்பாய் அவர்கள் தெரிவித்தார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தான் பாராளுமன்றத்தில் பசும்பொன் தேவர் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது . குறிப்பாக பாஜகவில் இருக்கும் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு, ஒரு புனித இடமாக யாத்திரைக்கு வருவது போன்ற உணர்வுடன் அங்கே தேவர் குருபூஜை அல்லாத மற்ற நாட்களும் வருவார்கள். பொன்னர் அவர்கள் அங்கே தியானம் செய்வதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன்.

பாஜகவை பொறுத்தவரை பசும்பொன் என்பது ஒரு கிராமம் மட்டுமல்ல அது ஒரு புண்ணிய பூமி, ஆன்மீக திருத்தலம், தேவர் அவர்கள் தேசியவாதிகள் மட்டுமல்ல இந்த நாட்டின் ஒரு மிகப்பெரிய ஆன்மீக பாரம்பரியத்தில் வந்த மகான், சித்தர். அவர் மறுபடியும் தேசியத்திற்கும் தெய்வீகத்தின் தமிழகத்தின் அடையாளமாக இந்திய அரசியலில் கம்பீரமாக வானில் உயர்ந்து நிற்க தான் போகிறார், ஏற்கனவே உயர்ந்து நிற்கிறார் மீண்டும் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்க தான் போகிறார். தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது கண்களாக போற்றுகின்ற தேவரின் சித்தாந்த வாரிசுகள் அனைவருக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டமா.?