ஆபத்துக்கு பாவம் இல்லை.! ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பேராசிரியர் வலியுறுத்தல்.!

0
Follow on Google News

கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது, இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவனைகளுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவைப்படுவதால், உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உதவியை பெற்று வருகிறது இந்தியா, மேலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, ரயில்கள் மற்றும் விமானம் மூலம் ஆக்சிஜன் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்க தயாராக இருப்பதாக தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை முன்வந்துள்ளது, இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க மத்தியஅரசு மற்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்த இன்று தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திறப்பதற்கு அனுமதிக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு சுற்றுச்சூழலையும் மற்றும் சுற்று பகுதியில் உள்ள மக்களின் உடல்நிலையை பெரிதும் பாதிக்கிறது என்பதுதான் அடிப்படை காரணமாக கூறப்பட்டது.

ஆனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அதுவும் கூட தமிழக அரசு எடுத்து நடத்தலாம் என உச்சநீதிமன்றம் சொல்லிய பிறகு, ஆபத்துக்கு பாவம் இல்லை என்றுதானே பார்க்க வேண்டும், இப்போதும் அதை செய்ய விடமாட்டோம் என்று சொன்னால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெரிய நட்டம். ஆக்ஸிஜனை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருகிறோம், ஆனால் அதை தயாரிக்க நம்ம நாட்டிலேயே வாய்ப்பு இருக்கும்போது அதில் நாம் பிடிவாதம் காட்டுவது சரியில்லை என்பதுதான் பாஜகவின் கருத்து.

பாஜகவை பொருத்தவரை தேச முழுவதும் இருக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலை எதற்காக மூடப்பட்டது என்ன காரணத்துக்காக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்ற காரணங்களுக்காக இல்லாமல், முற்றிலும் வேறு ஒரு காரணத்திற்கு மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதில் தவறு இல்லை என்பதுதான் பாஜகவின் கருத்து என அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.