பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படுகிறது என முதல்வர் விஜய் அதிரடியாக அறிவித்த உடனே தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் இந்த அறிவிப்பை கொண்டாடி வரும் நிலையில், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டசபை உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக திமுக கூடாரம் கதற ஆரம்பித்தது, இதில் ஒவ்வொருவராக வெளியில் வந்து தனி தனியாக பேட்டி அளித்தனர்,
இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வேண்டும், சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுகிறது, மீத்தேன் திட்டம் வேண்டாம், ஹ்யட்ரா கார்பன் வேண்டாம் , குளச்சல் துறைமுகம் வேண்டாம் என புறக்கணித்த திமுக, பரந்தூர் விமான நிலையம் மட்டும் வேண்டும் என்றால், எதோ இவர்களின் உள்நோக்கம் இருக்கும் என்பது தமிழக மக்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்தது, அந்த வகையில் தோண்ட தோண்ட பூதம் வெளியே வந்தது போன்று.

பரந்தூர் விமான நிலையம் கைவிட படுகிறது என்று முதல்வர் விஜய் அறிவித்த பின்பு, திமுக மாஜி அமைச்சர்கள் கதறல் பின்னணி ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுக காலகட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடக்க புள்ளியாக இருந்தாலும் கூட , இந்த திட்டம் திமுக ஆட்சியிலே உறுதி செய்யப்பட்டது. பரந்தூர் விமான நிலையம் வந்திருந்தால் தமிழகத்தில் மிக பெரிய விமான நிலையம் என்பது குறிப்பிடதக்கது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் 3வது விமான நிலையம் என்கிற அளவுக்கு மிக பிரமாண்டமாக விமான நிலையமாக உருவெடுத்து இருக்கும், அப்படி இருக்கையில், இந்த விமான நிலையம் அருகில் நிலம் விலையை யோசித்து பாருங்கள், எதிர்காலத்தில் ஒரு சதுரடி நிலம் விண்ணை முட்டும் விலைக்கு விற்கப்படும். இதை அறிந்து கொண்டு பரந்தூர் விமான நிலையம் அமைய இருக்கும் இடத்தை சுற்றி திமுகவினர் தங்கள் பினாமி பெயரில் இடத்தை வாங்கி குவித்து இருக்கிறார்கள்.
இடத்தை விற்பனை செய்ய விருப்பம் இல்லாதவர்களிடம், கூடுதல் விலை கொடுத்தும் இடத்தை வாங்கி குவித்து இருக்கிறார்கள், மேலும் இந்த பரந்தூர் விமான நிலையம் வந்தால், பேருந்து நிறுத்தம் எங்கே வரும், மெட்ரோ ரயில் நிறுத்தம் எங்கே வரும் என முக்கூட்டியே அறிந்து, அதன் அருகிலே இடத்தை வாங்கி குவித்து வைத்து இருக்கிறார்கள் திமுக மாஜி அமைச்சர்கள் உட்பட பல திமுகவினர்.
அதுமட்டுமில்லாமல் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவருடைய பண்ணை நிலம் பரந்தூர் அருகில் உள்ள உளுந்தூர் என்கிற கிராமத்தில் உள்ளது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது, அதுமட்டுமில்லாமல் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பினாமி மூலம் நடத்தி வரும் ஸ்ப்ரிங் மினரல் வாட்டர் அதே பரந்தூர் அருகிலே இருக்கிறது என்றும், அந்த வகையில் முக ஸ்டாலினுக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமே அங்கெ பல கோடி என்று கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் மாப்பிளை சார் பினாமி மூலமாக எதிராக்காலத்தில் ரியல் எஸ்டேட் செய்வதற்காக பல இடங்களை பரந்தூர் அருகே வாங்கி குவித்து இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது, அந்த வகையில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்று முதல்வர் விஜய்யின் பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படுகிறது என்கிற அறிவிப்பு அமைத்துள்ளது.
அதாவது தேர்தலுக்கு முன்பு பரந்தூர் பகுதி மக்களிடம் தவெக ஆட்சிக்கு வந்தால் பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என்று விஜய் வாக்குறுதியை நிரைவேற்றியும் விட்டார், திமுகவினர் வாங்கி குவித்து இருக்கும் இடங்களை இனி வாங்கிய விலைக்கு கூட விற்பனை செய்ய முடியாதபடி செய்துவிட்டார் முதல்வர் விஜய் என்கிறது அரசியல் வட்டாரங்கள், இது தான் பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டதற்கு திமுகவினர் கதறி வருவதாக கூறப்படுகிறது.

